2025 இந்த ஆண்டு IPL விறுவிறுப்பாக நடந்துகொண்டுள்ள, இந்த சமயத்தில் கிரிக்கெட் என்றாலே நம் நினைவுக்கு வருவது, குறிப்பிட்ட சில வீரர்கள் தான், அதிலும் தங்களுக்கென தனி ஸ்டைலையும் ,தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருப்பவர்கள் வெகுசிலரே.
அது அவர்கள் , கலத்தில் இறங்கி ,ஆடினாலும் சரி ஆடாவிட்டாலும் சரி அவர்களுக்கென இருக்கும் ரசிகர்கள் அவர்களை எப்போதும் கைதட்டியும் ,விசுலடித்தும் கொண்டாடி , கொண்டேதான் இருக்கிறார்கள்.
இந்நிலையில் அதிக சொத்து மதிப்பு வைத்து இருக்கும் கிரிக்கெட் வீரர்களை பற்றி இந்த தொகுப்பில், வரிசையாக பார்கலாம்.
சச்சின் டெண்டுல்கர்:
"கிரிக்கெட்டின் கடவுள்" என்று அழைக்கப்படும் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர், உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அவரது நிகர மதிப்பு சுமார் 170 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (அதாவது சுமார் 1,400 கோடி இந்திய ரூபாய்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 4 முனை போட்டியாக மாறிய களம்...அதிரடி காட்டும் அதிமுக...எப்படி சமாளிக்கும் திமுக?
சச்சின் அவர்கள் 24 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) இருந்து, பெரும் தொகையை சம்பாதித்தார். ஐபிஎல்-லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியபோது, 2008 முதல் 2013 வரை ஆண்டுக்கு சுமார் 4.48 கோடி முதல் 8.28 கோடி ரூபாய் வரை சம்பளமாகப் பெற்றார். மொத்தமாக ஐபிஎல் மூலம் 38.29 கோடி ரூபாய் சம்பாதித்தார்.
இவர் ஆண்டுக்கு சுமார் 20-22 கோடி ரூபாயை விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் ஈட்டுகிறார். அவர் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் சில பிரபல நிறுவனங்கள்: கோகோ-கோலா, பிஎம்டபிள்யூ இந்தியா, அடிடாஸ், பெப்சி, டிவிஎஸ், எம்ஆர்எஃப், பூஸ்ட், அன்அகாடமி, லுமினஸ் இந்தியா மற்றும் பேடிஎம் ஃபர்ஸ்ட் கேம்ஸ். போன்ற நிறுவனங்கள் ஆகும் .
விராட் கோலி :
இன்றைய RCB அணியின், முதன்மை வீரராக இருக்கும்,விராட் கோலியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1,050 கோடி இந்திய ரூபாய் (INR 1050 Crores) என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க டாலரில் சுமார் 127 மில்லியன் டாலர் (USD 127 Million) ஆகும்.
இவர் கிரிக்கெட்டில் "A+" பிரிவில் உள்ள வீரராக இருப்பதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து (BCCI) ஆண்டுக்கு சுமார் 7 கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுகிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியில் விளையாடும் விராட் கோலி, ஒரு ஐபிஎல் சீசனுக்கு சுமார் 15 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.விராட் கோலி ஒரு விளம்பர ஒப்பந்தத்திற்கு, 7.5 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை வசூலிக்கிறார். அவர் பூமா (Puma), ஆடி (Audi), எம்ஆர்எஃப் டயர்ஸ் (MRF Tyres), மொபைல் பிரீமியர் லீக் (MPL) உள்ளிட்ட பல பிரபலமான பிராண்டுகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
இன்ஸ்டாகிராமில் 270 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட விராட் கோலி, ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு, சுமார் 11.45 கோடி ரூபாய் வசூலிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
MS தோனி :
எப்போது குறைவில்லா ரசிகர் பட்டணத்திற்கு, சொந்தகாரர் தோனி அவர்கள் ,அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1,040 கோடி ரூபாய் ஆகும். இது அவரை உலகின் மிக பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக ஆக்குகிறது.
அவரது ஆண்டு வருமானம் சுமார் 50 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஐபிஎல் (IPL) சம்பளம் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் விளையாடும் தோனி, 2025 ஐபிஎல் சீசனில் "தொப்பி இல்லாத" (uncapped) வீரராக 4 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார், 18 ஆண்டுகளில் அவர் ஐபிஎல் மூலம் சுமார் 190 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.
தோனி ஒரு விளம்பரத்திற்கு 3.5 முதல் 6 கோடி ரூபாய் வரை வசூலிக்கிறார். அவர் ட்ரீம்11, பெப்சி, ரீபாக், கல்ஃப் ஆயில், மாஸ்டர்கார்டு போன்ற பல பிரபல பிராண்டுகளை விளம்பரப்படுத்துகிறார். 2024 ஆம் ஆண்டில் அவர் 42 விளம்பர ஒப்பந்தங்களை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
அவரது சுயசரிதை திரைப்படமான "MS Dhoni: The Untold Story" மூலம் 30 கோடி ரூபாய் சம்பாதித்தார். மேலும், சமூக ஊடகங்களில் பதிவுகளுக்கு 1 முதல் 2 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
ரிஷாப் பந்த் :
இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்தின், மொத்த சொத்து மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் (₹100 Crore) என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது அவரது கிரிக்கெட் சம்பளம், ஐபிஎல் (IPL) ஒப்பந்தங்கள் மற்றும் விளம்பர ஒப்பந்தங்களிலிருந்து, பெறப்பட்ட வருமானத்தை உள்ளடக்கியது.
ரிஷப் பந்த் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து, (BCCI) தரம் B ஒப்பந்தத்தின் கீழ் ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுகிறார். மேலும், ஐபிஎல் 2025 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணியால் 27 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு, ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதில் வரி கழித்த பிறகு அவருக்கு சுமார் 18.9 கோடி ரூபாய் நிகர சம்பளமாகக் கிடைக்கும்.
இது தவிர, அவர் பல பிரபல பிராண்டுகளான Adidas, JSW Steel, Dream11, Boat, Realme மற்றும் Cadbury போன்றவற்றின் விளம்பரத் தூதராக இருப்பதால், ஒவ்வொரு விளம்பர ஒப்பந்தத்திற்கும் சுமார் 20-30 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
கெவின் பீட்டர்சன் :
கெவின் பீட்டர்சன் (Kevin Pietersen) ஒரு முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பிரபலமான பேட்ஸ்மேன் ஆவார். அவரது சொத்து மதிப்பு,சுமார் 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ,இது தமிழில் தோராயமாக ரூ. 63 கோடி ஆகும்.
அவரது சொத்து மதிப்பு கிரிக்கெட் சம்பளம், ஐபிஎல் (IPL) போன்ற லீக் போட்டிகள், விளம்பர ஒப்பந்தங்கள் (endorsements) மற்றும் பிற தொழில் முயற்சிகளில் இருந்து பெறப்பட்டது.
இவர் பல பிராண்டுகளுடன் ஒரு நல்ல ஒப்பந்த தொடர்பு கொண்டிருந்தார், அதில் சில முக்கியமானவை அடிடாஸ் (Adidas) மற்றும் ரெட் புல் (Red Bull) போன்றவை ஆகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்