"IPL-ல் மேட்ச் ஃபிக்சிங் செய்து ரூ.3 கோடி சம்பாதித்தேன்" - முன்னாள் வீரர் பகீர்.. ரகசியங்களை விற்ற வீரர் யார்?

"டாஸுக்கு முன்பு பிளேயிங் லெவன் குறித்த உள் தகவல்களைப் பகிர்வதற்கு ஒரு போட்டிக்கு ₹60 லட்சம் செலவாகும்." - முன்னாள் வீரர்
"IPL-ல் மேட்ச் ஃபிக்சிங் செய்து ரூ.3 கோடி சம்பாதித்தேன்" - முன்னாள் வீரர் பகீர்.. ரகசியங்களை விற்ற வீரர் யார்?
"IPL-ல் மேட்ச் ஃபிக்சிங் செய்து ரூ.3 கோடி சம்பாதித்தேன்" - முன்னாள் வீரர் பகீர்.. ரகசியங்களை விற்ற வீரர் யார்?IPL 2025
Published on
Updated on
2 min read

IPL தொடரில் மீண்டும் match fixing சர்ச்சை எழுந்துள்ளது. முன்னாள் ரஞ்சி கோப்பை வீரர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உள் விவகாரங்களைப் பெற்று மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டு 3 கொடி சம்பாதித்ததாகத் தெரிவித்துள்ளார்.

Tehelka என்ற செய்தி நிறுவனம் நடத்திய புலன் விசாரணையில் முன்னாள் டெல்லி மற்றும் ஹரியானா ரஞ்சி வீரர் ரசித் பாட்டியா தரகராக செயல்பட்டு லண்டனில் உள்ள பந்தயக் காரர்களுக்கு ரகசியத் தகவல்களை வழங்கியுள்ளார்.

"நான் 2025 இந்தியா பிரீமியர் லீக் சீசனின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய ரகசிய தகவல்களை ஸ்னாப் சேட் வழியாக லண்டனில் உள்ள பந்தையம் கட்டுபவர்களுக்கு அனுப்பி 5 போட்டிகளை fix செய்தேன்." என பாட்டியா சொன்னதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் ஒரு போட்டிக்கு 60 லட்சம் என 3 கோடி ரூபாய் சம்பாதித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் பாட்டியா டெல்லி பிரீமியர் லீக் தொடரில் பிளேயிங் 11 விவரங்களையும் அணியின் ரகசிய தகவல்களையும் சூதாட்ட அமைப்புகளுக்கு வழங்கியதாக கூறியுள்ளார்.

இந்த விசாரணை, அணி அமைப்புகளுக்குள் இருக்கும் தவறான தொடர்புகள் மூலம், உள்நாட்டு டி20 லீக்குகளையும் ஐபிஎல்லையும் இணைக்கும் ஒரு பரந்த வலையமைப்பு செயல்படுவதைச் சுட்டிக்காட்டுகிறது.

பாட்டியா இதுகுறித்து, “டாஸுக்கு முன்பு பிளேயிங் லெவன் குறித்த உள் தகவல்களைப் பகிர்வதற்கு ஒரு போட்டிக்கு ₹60 லட்சம் செலவாகும். இதே வீரர் இந்த ஆண்டு டெல்லி பிரீமியர் லீக்கிலும் [DPL] போட்டியிடுவார். அங்கு ஸ்பாட் ஃபிக்சிங் செய்வதற்கும், ஆடும் லெவனை வழங்குவதற்கும் ஒரு போட்டிக்கு ₹40 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படும்” என்றும் பேசியிருப்பதாக Tehelka கூறுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்ன தொடர்பு?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஒரு வீரர் மூலமே அணியின் உள் தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த வீரர் யார் என்பதைச் செய்தியறிக்கை தெரிவிக்கவில்லை.

இதனால், சமூக வலைத்தளங்களில் யார் அந்த வீரர் என்ற விவாதம் எழுந்தது. 2025 CSK அணியில் இடம்பெற்று, டெல்லி பிரீமியர் லீக்கிலும் விளையாடிய வன்ஷ் பேடியை நோக்கி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அறிக்கை யாரையும் சுட்டிக்காட்டாததால், உறுதியாக அந்த வீரரை அடையாளம் காண முடியவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இப்போது வரை இதில் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.

Spot Fixing அபாயம்!

அந்த அறிக்கையின்படி, 2018-19 சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டி ஒன்றில் வேண்டுமென்றே வைடு பந்துகளை வீசியதன் மூலம் சுமார் ₹16 லட்சம் சம்பாதித்ததாக பாட்டியா ஒரு பழைய சம்பவம் குறித்தும் பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் சூதாட்டம் மற்றும் ஊழல் அபாயங்கள் மீதான கண்காணிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சட்டவிரோத கும்பல்களின் அணுகுமுறைகள் குறித்து ஊழல் தடுப்புப் பிரிவுகள் வீரர்களைத் தொடர்ந்து எச்சரித்து வரும் சூழலில், இந்தப் புதிய குற்றச்சாட்டுகள் கவலையளிக்கின்றன.

இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், பிசிசிஐ மற்றும் ஐபிஎல் ஊழல் தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

"IPL-ல் மேட்ச் ஃபிக்சிங் செய்து ரூ.3 கோடி சம்பாதித்தேன்" - முன்னாள் வீரர் பகீர்.. ரகசியங்களை விற்ற வீரர் யார்?
3 வருட தோல்விக்கு முற்றுப்புள்ளி? ஜாகீர் கானை நியமித்த தோனியின் திட்டம்.. இந்த சீசனில் CSK அதிரடி இருக்குமா?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com