``செலக்டர் எங்க உக்காந்துருக்கானோ, அங்கேயே அடிக்கணும்" MS தோனி பட டயலாக் பேசிய சூர்யாகுமார் யாதவ்.. முன்னாள் கேப்டனின் உள்ளூர் அதிரடி!

ன்னடைவில் இருந்து காம்பேக் கொடுக்க வேண்டும் என போராடி வருகிறார் சூர்யகுமார் யாதவ். அதற்காக தேர்வுக்குழுவின் கதவுகளைத் தட்டத் தொடங்கியுள்ளார்.
Suryakumar Yadav Quotes MS Dhoni Movie Dialogue After Explosive 60* in Syed Mushtaq Ali Trophy 2026
``செலக்டர் எங்க உக்காந்துருக்கானோ, அங்கேயே அடிக்கணும்" MS தோனி பட டயலாக் பேசிய சூர்யாகுமார் யாதவ்.. முன்னாள் கேப்டனின் உள்ளூர் அதிரடி!
Published on: 
Updated on: 
1 min read

கடந்த 2026 T20 உலகக் கோப்பையில் இந்திய அணியை வெற்றிக்கு வழிநடத்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ். ஆனால், அந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு உடனடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்காக பிசிசிஐ (BCCI) தேர்வுக்குழுவினரை முழுமையாகக் குறை கூற முடியாது; ஏனெனில் சூர்யகுமாரின் மோசமான பேட்டிங் ஃபார்மே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. மேலும், அணியின் கேப்டன் பொறுப்பு ஸ்ரேயாஸ் ஐயரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த பின்னடைவில் இருந்து காம்பேக் கொடுக்க வேண்டும் என போராடி வருகிறார் சூர்யகுமார் யாதவ். அதற்காக தேர்வுக்குழுவின் கதவுகளைத் தட்டத் தொடங்கியுள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி கோப்பை (Syed Mushtaq Ali Trophy 2026) தொடரின் தொடக்க ஆட்டத்தில், ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை அணியின் கேப்டனான சூர்யகுமார், கடந்த நவம்பர் 14 அன்று வெறும் 21 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ரன்களை விளாசினார்! இவரது அனல் பறக்கும் இந்த இன்னிங்ஸில் 6 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடித்தார்.

Suryakumar Yadav Quotes MS Dhoni Movie Dialogue After Explosive 60* in Syed Mushtaq Ali Trophy 2026
``ஒரு மேட்ச் கூட ஜெயிக்கலையா?" பாகிஸ்தான் மட்டுமில்லை.. UAE, இங்கிலாந்திடமும் அடி வாங்கிய 'இந்திய அணி'! ஹாங்காங் சிக்ஸெஸில் என்னதான் நடக்குது?

ஆட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சூர்யகுமார், "எம்.எஸ்.தோனி படத்துல தோனியோட ஃப்ரெண்ட் ஒண்ணு சொல்வாரே... 'செலக்டர் எங்க உக்காந்துருக்கானோ, அங்கேயே அடிக்கணும்'னு! இன்னைக்கு என்னோட பிளானும் அதுதான். தொடர்ந்து ரன்களைக் குவிக்கணும், மேட்சை வின் பண்ணிக் கொடுக்கணும், அப்புறம் 3 முதல் 5-வது வரிசைகளில் இறங்கி அந்த 'ஹை-ரிஸ்க், ஹை-ரிவார்ட்' (High-risk, high-reward) கேமை விளையாட முயன்று வருகிறேன்," எனப் பேசினார்.

சூர்யகுமார் தன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியபோது, பிசிசிஐ-யின் மூத்த ஆண்கள் தேர்வுக்குழுவின் கிழக்கு மண்டலப் பிரதிநிதியான சிவ சுந்தர் தாஸும், சில ஐபிஎல் (IPL) ஸ்கௌட்டுகளும் மைதானத்தில் ஆட்டத்தைக் காண அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் அடித்த சிக்சர்களில் ஒன்று, சால்ட் லேக்கில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் 2-வது மைதானத்தைவிட்டே வெளியே பறந்தது குறிப்பிடத்தக்கது.

பெருமைமிக்க இந்திய அணியின் கேப்டனாக இருந்து திடீரென அணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள சூர்யாகுமார் தன்னை மீண்டும் நிரூபிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவற்றால் பலன் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Suryakumar Yadav Quotes MS Dhoni Movie Dialogue After Explosive 60* in Syed Mushtaq Ali Trophy 2026
ரோஹித், கோலி, கேப்டன் ஷ்ரேயாஸ்.. மேட் ஹென்றியிடம் சுருண்ட ஜாம்பவான்கள் - வரலாற்றில் மோசமான தோல்வியா?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்