
சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசன்ல புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துல இருக்கு. இதுவரை 8 மேட்ச்ல 2 வெற்றி மட்டுமே. ஆனா, இன்னைக்கு இந்த தோல்வி பயணத்துக்கு நிச்சயம் ஒரு முற்றுப்புள்ளி இருக்கு.
வெல்கம் யங் பாய்
ஆம்! காரணம் டிவால்ட் பிரெவிஸ்!. 21 வயசு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர். இவரோட ஆட்டத்தைப் பார்த்தா, முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் ஏபி டி வில்லியர்ஸோட பேட்டிங் ஸ்டைலை நினைவு படுத்தும். அதனாலயே இவருக்கு ‘பேபி ஏபி’னு செல்லமா பட்டப்பெயர். 2022 U19 உலகக் கோப்பையில 506 ரன்கள் அடிச்சு, ஒரு டோர்னமெண்ட்ல அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை படைச்சவர். T20 கிரிக்கெட்டுல 81 மேட்ச்ல 1787 ரன்கள், அதுவும் 144.93 ஸ்ட்ரைக் ரேட்டோட, இவரோட அதிரடி திறமையை காட்டுது.
இவரோட அதிகபட்ச ஸ்கோர் 162 ரன்கள், அதுவும் வெறும் 57 பந்துகளில்! SA20 லீக்ல MI கேப் டவுன் டீமுக்கு 291 ரன்கள் அடிச்சு, 184.17 ஸ்ட்ரைக் ரேட்டோட, அந்த டீம் முதல் டைட்டிலை வெல்ல உதவினார். இப்படி ஒரு டேலண்டட் பிளேயரை, காயமடைந்த பவுலர் குர்ஜப்நீத் சிங்குக்கு பதிலா, CSK 2.2 கோடி ரூபாய்க்கு இந்த சீசனுக்கு எடுத்திருக்கு.
CSK-யோட இப்போதைய பேட்டிங் லைன்-அப்-ல, யாருமே அதிரடியாவும் இல்ல.. கன்சிஸ்டன்சியாவும் இல்ல. மிடில் ஆர்டர்ல ஒரு பவர்-ஹிட்டரோட தேவை இருக்கு. இதுக்கு பிரெவிஸ் ஒரு சரியான ஆப்ஷனா இருக்காரு. இவரோட பவர்-ஹிட்டிங், குறிப்பா ஸ்பின்னர்களுக்கு எதிரான ஆட்டம், CSK-க்கு ஒரு புது எனர்ஜியை கொடுக்கும். இவரு 81 T20 மேட்ச்ல 123 சிக்ஸர்கள், 123 ஃபோர்கள் அடிச்சிருக்காரு, இது CSK-யோட பவுண்டரி பிரச்சனைக்கு ஒரு தீர்வா இருக்கும்.
தோனியோட கண்கள் பிரெவிஸ் மேல!
நேற்று சென்னையில் நடந்த CSK-யோட பயிற்சி அமர்வு, பிரெவிஸோட திறமையை முழுசா வெளிப்படுத்தின ஒரு தருணமா இருந்திருக்கு. CSK தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங், பேட்டிங் கோச் மைக்கேல் ஹசி ஆகியோரோட மேற்பார்வையில், பிரெவிஸ் தன்னோட பேட்டிங் பயிற்சியை ரொம்ப தீவிரமா எடுத்துக்கிட்டாரு. இவரோட ஒவ்வொரு ஷாட்டையும், குறிப்பா பவர்-ஹிட்டிங் ஷாட்ஸையும், பயிற்சியாளர்கள் கூர்ந்து கவனிச்சாங்க. ஆனா, இதுல முக்கியமான விஷயம், எம்எஸ் தோனி தனிப்பட்ட முறையில் பிரெவிஸோட ஆட்டத்தை நெருக்கமா பார்த்தது.
பிரெவிஸ், பயிற்சி மேட்ச்ல சிக்ஸர்களை வாரி இறைச்சாரு. இவரோட லாஃப்ட்டட் கவர் டிரைவ்ஸ், பிக் லாஃப்ட்டட் ஷாட்ஸ், ஸ்பின்னர்களுக்கு எதிரான ஸ்வீப் ஷாட்ஸ் எல்லாம், தோனியோட கவனத்தை ஈர்த்திருக்கு. தோனி, ஒரு கேப்டனா மட்டுமில்லாம, ஒரு மென்டாரா, இளம் வீரர்களோட திறமையை மதிப்பிடுறதுல எப்பவும் கில்லாடி. பிரெவிஸோட இந்த பயிற்சி ஆட்டத்தை பார்த்து, தோனி இவருக்கு ஒரு பச்சைக் கொடி காட்டியிருக்காருனு தகவல்கள் வெளியாகியிருக்கு.
இன்றைய மேட்ச் சென்னையில், MA சிதம்பரம் ஸ்டேடியத்துல நடக்குது. சேப்பாக் பிட்ச் பொதுவா ஸ்பின் பவுலிங்குக்கு சாதகமா இருக்கும். CSK-யோட இப்போதைய பேட்டிங் ஆர்டர், ரச்சின் ரவீந்திரா, ஷைக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே மாதிரியான இளம் வீரர்களை நம்பி இருக்கு. ஆனா, மிடில் ஆர்டர்ல ஒரு பவர்-ஹிட்டர் இல்லாதது பெரிய குறையா இருக்கு. பிரெவிஸ், இந்த இடத்துல நம்பர் 4 இடத்துல வந்து, ஷிவம் துபே, விஜய் ஷங்கர் மாதிரியான வீரர்களோட இணைந்து ஆடினா, CSK-யோட பேட்டிங்குக்கு ஒரு புது பலம் கிடைக்கும்.
SRH-க்கு எதிரான சவால்
SRH டீம் இந்த சீசன்ல 8 மேட்ச்ல 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்துல இருக்கு. இவங்களோட பேட்டிங்ல, ஹென்ரிச் கிளாசன் (281 ரன்கள், 159.65 ஸ்ட்ரைக் ரேட்) மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார். டிராவில் ஹெட் சுத்தமா ஃபார்ம்ல இல்ல. அபிஷேக்-கிட்ட கன்சிஸ்டன்சி இல்ல. இஷான் கிஷன் இந்த உலகத்துலயே இல்ல.. முதல் மேட்ச்சுல அடிச்ச செஞ்சுரிக்கு பிறகு, அவர் வேற ஏதோ ஒரு நினவுல சிக்கிக்கிட்டு தள்ளாடிக்கிட்டு இருக்கார். அதுலயும், போன மேட்சுல மும்பைக்கு எதிரா அவுட்டே ஆகாம, அவரா வெளியே போனதெல்லாம் வேற லெவல் சம்பவம்.
CSK-க்கு இந்த மேட்ச் ஒரு பெரிய வாய்ப்பு. SRH-யோட பவுலிங் பலவீனத்தை பயன்படுத்தி, பிரெவிஸ் மாதிரியான ஒரு அதிரடி வீரர் மூலமா பெரிய ஸ்கோரை அடிக்க முடியும். குறிப்பா, பிரெவிஸோட பவர்-ஹிட்டிங், SRH-யோட ஹர்ஷல் பட்டேல், ஜெயதேவ் உனத்கட் மாதிரியான பவுலர்களுக்கு ஒரு பெரிய சவாலா இருக்கும். அதே நேரத்துல, CSK-யோட ஸ்பின்னர்கள் நூர் அகமது, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர், SRH-யோட பேட்டிங்கை கட்டுப்படுத்த முயற்சி பண்ணுவாங்க.
CSK-யோட இப்போதைய சூழ்நிலையை பார்க்கும்போது, பிளேயாஃப் வாய்ப்பை தக்க வைக்க, இனி ஒவ்வொரு மேட்சும் முக்கியம். பிரெவிஸை இன்று களமிறக்குறது, CSK-யோட ஒரு தைரியமான முடிவா இருக்கும். இவரோட இளமையும், அதிரடி ஆட்டமும், CSK-யோட பேட்டிங்குக்கு ஒரு புது உத்வேகத்தை கொடுக்கும். தோனியோட மென்டார்ஷிப், ஃபிளெமிங்கோட ஸ்ட்ராடஜி, ஹசியோட பேட்டிங் கைடன்ஸ் ஆகியவை, பிரெவிஸை ஒரு மேட்ச்-வின்னரா மாற்ற வாய்ப்பு இருக்கு.
நேற்றைய பயிற்சியில், பிரெவிஸ் நம்பர் 4 இடத்துல பேட்டிங் பண்ணியதா தகவல்கள் சொல்றது. இது, CSK-யோட பிளேயிங் XI-ல இவருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருக்குன்னு காட்டுது. சாத்தியமான CSK லைன்-அப் இப்படி இருக்கலாம்:
ரச்சின் ரவீந்திரா
ஷைக் ரஷீத்
ஆயுஷ் மாத்ரே
டிவால்ட் பிரெவிஸ்
ஷிவம் துபே
விஜய் ஷங்கர்
எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்)
ஜேமி ஓவர்டன்
நூர் அகமது
கலீல் அகமது
மதீஷா பதிரனா
இம்பாக்ட் பிளேயர்: ரவிச்சந்திரன் அஷ்வின்
ஃபேன்ஸோட எதிர்பார்ப்பு
டிவால்ட் பிரெவிஸ் இன்று SRH-க்கு எதிரான மேட்ச்ல களமிறங்குறது, CSK-யோட ஒரு ஸ்மார்ட் மூவா இருக்கும். நேற்றைய பயிற்சி அமர்வுல இவரோட தீவிரமும், தோனி, ஃபிளெமிங், ஹசி ஆகியோரோட கவனமும், இந்த முடிவுக்கு ஒரு உறுதியான பின்பலமா இருக்கு. சேப்பாக்கு மைதானத்துல, SRH-யோட பவுலிங்கை எதிர்கொள்ள, பிரெவிஸோட அதிரடி ஆட்டம் ஒரு பெரிய ஆயுதமா இருக்கும். இந்த இளம் வீரர், தன்னோட முதல் மேட்ச்லயே ஒரு பெரிய இம்பாக்ட்டை உருவாக்குவாரா? இன்னும் சில மணி நேரத்துல, சேப்பாக்கு ரசிகர்களுக்கு ஒரு புது ஹீரோவை பார்க்க முடியுமா? வெயிட் பண்ணி பார்க்கலாம்!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்