

கடந்த ஆண்டு 2025 ஜூன் மாதம் 4ம் தேதி நடந்த RCB வெற்றி கொண்டாட்டத்தின்போது 11 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (royal) ஐபிஎல் 2026க்கான தொடக்க விழாவைத் தவிர்க்க முடிவு செய்துள்ளது. இதன் விளைவாக, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே சனிக்கிழமை இரவு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2026 தொடக்கப் போட்டிக்கு முன்பு எந்தக் கொண்டாட்டங்களும் நடைபெறாது எனக்கூறியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 4 அன்று நடந்த RCB வெற்றி கொண்டாட்டத்தின்போது 11 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தின் காரணமாக, ஐபிஎல்-2026 தொடங்கும் நாளில், பெங்களூரில் எந்தவொரு முறையான நிகழ்ச்சியும் நடைபெறாது. அந்தத் துயரச் சம்பவத்தில் ஜூன் 4, 2025 அன்று கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஐபிஎல்-19 தொடக்க விழாவில் பிசிசிஐ எந்தவொரு கலாச்சார அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்யவில்லை என்று கூறியுள்ளது. இருப்பினும், ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் நாளன்று அதாவது, மே 31ல், ஐபிஎல் நிறைவு விழாவாக ஒரு பிரம்மாண்டமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு திட்டமிட்டுள்ளன," என்று கூறியிருக்கிறார்கள்.
"ஜூன் 4-ஆம் தேதி நாம் இழந்த 11 ரசிகர்களின் நினைவாக, போட்டி நாளன்று ஆட்டத்திற்கு முந்தைய பயிற்சி நேரத்தில் வீரர்கள் 11ம் எண் ஜெர்சியை அணிவார்கள்," என்று ஆர்சிபி தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் மேனன் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, அன்று வீரர்கள் கருப்பு நிறக் கைப்பட்டைகளையும் அணிவார்கள். மேலும், சின்னசாமி மைதானத்தில் நிரந்தரமாக 11 இருக்கைகளை அமைக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இது, என்றென்றும் எங்களுடன் இருக்கப்போகும் அந்த 11 ரசிகர்களுக்காகத்தான்,” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா, மார்ச் 25, புதன்கிழமை அன்று, பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்திற்கு வெளியே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 ரசிகர்களின் நினைவாக ஒரு நினைவிடத்தைத் திறந்து வைத்தார். மேலும், அவர் உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலியும் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.