DMk

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் திடீரென நுழைந்த வாகனங்கள்… அதிரடி ஆய்வு செய்த திமுகவினர்

கோவையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் திடீரென நுழைந்த வாகனத்தில் திமுகவினர் ஆய்வு செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள், தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி. கல்லூரியில் வைக்கப்பட்டு ஒவ்வொரு அறைகளும் சீலிட்டு மூடப்பட்டுள்ளது. அந்த வாக்குகள் அனைத்தும் வரும் 2-ம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில், கல்லூரி வளாகத்திற்குள்...

துரைமுருகன் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை..!!!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளதாக தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், துரைமுருகன்...

தேர்தல் மோதலில் இருவர் கொலை….மு.க.ஸ்டாலின் கண்டனம்

அரக்கோணம் அருகே தேர்தல் மோதலில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரக்கோணம் அருகே நிகழ்ந்த தேர்தல் மோதலில் அர்ஜுனன், சூரியா ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக குறிப்பிட்டிருந்தார். கொலையுண்ட இருவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ள ஸ்டாலின், மக்களால்...

இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல! -ஆளுநரை கண்டித்து துரைமுருகன் அறிக்கை.!

இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல! -ஆளுநருக்கு துரைமுருகன் கடிதம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத் துணை வேந்தராக டாக்டர் திரு. செல்வகுமார் நியமிக்கப்பட்டதை கண்டித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் "தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தல் 6.4.2021 அன்று தான் நடந்து முடிந்திருக்கிறது. ஆட்சி மாற்றத்திற்கான சூழலை இந்தத் தேர்தல்...

திமுகவினர் மீது அதிமுகவினர் கொலை வெறி தாக்குதல்.!!!

திருப்புவனத்தில் திமுகவினர் மீது அதிமுகவினர் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் வயல்சேரி திமுக கிளை செயலாளர் சக்திவேல்-முத்துபேச்சி தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சக்திவேலும், அவரது தந்தை கருப்பசாமி திமுகவை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் வாக்கு சேகரிப்பது உள்ளிட்ட கட்சி வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டனர். குறிப்பாக வீடுகள்...

எதுவும் நடக்கலாம்… வாக்குப்பதிவு இயந்திரங்களை விழிப்புடன் கண்காணிக்க ஸ்டாலின் வேண்டுகோள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை விழிப்புடன் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தோழர்கள் கண்காணித்திட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஆளும் கட்சியின் அடக்குமுறைகளை சமாளித்து திமுகவினரும் - கூட்டணிக் கட்சித் தோழர்களும் தேர்தல் பணியாற்றியது பாரட்டுக்குரியது என ஸ்டாலின் தெரிவித்தார். அமைச்சர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் வேட்பாளர்களும்,...

திமுக வேட்பாளரின் நண்பர்கள் வீட்டில் அதிரடி சோதனை…ரூ.35 லட்சம் பறிமுதல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரின் நண்பர்கள் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. குமாரபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தின் நண்பரான ரத்தினகிரி டெக்ஸ் உரிமையாளர் சங்கர் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சங்கர் வீட்டிற்கு...

அதிமுக ரூ.500 கொடுக்குதா?… அப்ப நாம ரூ.200 கொடுப்போம்… திமுக “நேரு” வீடியோ வைரல்

வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக திமுகவின் முதன்மை செயலாளரும், திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நாளை மறுநாள் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வடைகிறது. அதேசமயம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பொருட்கள் என சகலமும் சர்வ சாதாரணமாக...

ஜனநாயகத்தின் மீது தான் அதிமுகவிற்கு நம்பிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்

ஜனநாயகத்தின் மீது தான் அதிமுகவிற்கு நம்பிக்கையே தவிர பண நாயகத்தின் மீது அல்ல என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ராயபுரம் தொகுதியின் அதிமுக வேட்பாளரும் , மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார், சென்னை ராயபுரம் பகுதியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.அதேப்போல் கிரிக்கெட் விளையாடியிடும் இளைஞர்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்..திமுக ஆட்சி காலத்தில்...

மகனுக்காக களமிறங்கிய ஸ்டாலின்… ஜெயிக்க வைப்பீர்களா? என கேள்வி

சேப்பாக்கம் தொகுதியில்  போட்டியிடும் திமுக வேட்பாளர் உதயநிதிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வாக்கு சேகரித்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது, இதனை முன்னிட்டு கடந்த ஒருமாத காலமாக களைக்கட்டிய பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனிடையே சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதியை ஆதரித்து அவரது தந்தையும்,திமுக...
- Advertisement -

Latest News

மீண்டும் உயர்வை நோக்கி ‘ராயல் என்ஃபீல்டு’ பைக்களின் விலை… புதிய விலை பட்டியல் உள்ளே..

350 சி.சி. திறன் எஞ்சின் கொண்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இம்மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம்,...
- Advertisement -