"இஸ்லாமியர்களின் உணர்வுப் பூர்வ தோழன் அதிமுக" ஜெயக்குமார் உருக்கம்!

"இஸ்லாமியர்களின் உணர்வுப் பூர்வ தோழன் அதிமுக" ஜெயக்குமார் உருக்கம்!

அதிமுக இஸ்லாமியர்களின் உணர்வுப் பூர்வ தோழனாக இருந்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
காயிதே மில்லத்தின் 128 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய மசூதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு உணர்வுப் பூர்வமான தோழனாக அதிமுக உள்ளதாக கூறினார். மேலும், காயிதே மில்லத் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்ட மேடையிலேயே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றியதாக ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தமிழ்நாடு போதை வஸ்து மாநிலமாக மாறிவிட்டது எனவும் அவர் சாடிய அரசு டாஸ்மாக் கடையில் மது வாங்க மக்கள் அச்சப்படும் நிலை உருவாகி இருப்பதாக அவர் விமர்சித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com