ராஜேந்திர பாலாஜிக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த இபிஎஸ்...!!

ராஜேந்திர பாலாஜிக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த இபிஎஸ்...!!

தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு  அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருக்கங்கல்லை சேர்ந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. மாவட்ட அளவில் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.  முன்னாள் அமைச்சரான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை தவசிலிங்கம் கடந்த 17ம் தேதி அன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.  93 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை வடமலையான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

ராஜேந்திரபாலாஜி தந்தையின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர், அருமை சகோதரர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை தவசிலிங்கம் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றதாக குறிப்பிட்டு இரங்க்ல் தெரிவித்திருந்ததோடு தந்தையை இழந்து வாடும் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தத்தையும் தெரிவிப்பத்தோடு , அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக எடப்பாடி பழனிசாமி பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி  சிவகாசியில் உள்ள ராஜேந்திரபாலாஜியின் இல்லத்திற்கு சென்று குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.  அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ஆகியோர் உடனிருந்தனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com