ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் நேற்று கூட பேசினேன் நலமுடன் இருக்கிறார் - மா.சு

ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் நேற்று கூட பேசினேன் நலமுடன் இருக்கிறார் - மா.சு

ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது.  நேற்று கூட பேசினேன். நலமுடன் இருக்கிறார் என செய்தியாளர்களை சந்தித்த சுகாதர துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியவை பின்வருமாறு...

ஓமைக்ரான் வகைகளால் தான் தீவிர பாதிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுள்ளன. யாருக்கும் தீவிர பாதிப்பு இல்லை. மக்கள் அச்சப்பட வேண்டாம். ஓமைக்ரானின் வகைகளால் தான் பாதிப்பு ஏற்படுள்ளது மற்ற நாடுகளில் அதிகரிப்பு தான் இங்கும் அதிகரிக்க காரணம் கோவிட் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் 

கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது

கடந்த வாரம் ஒன்றிய அரசின் சுற்றறிக்கை கிடைக்கப்பெற்றது. தமிழ்நாடு,  கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கோவிட் தொற்று அதிகரிப்பு தொடர்பான அறிக்கை அது. 
இந்தியா முழுமையும் அதிகரித்துள்ள கொரோனா Xbb, ba2 என்ற ஓமைக்ரானின் வகைகளால் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. எனினும் தீவிர பாதிப்பு யாருக்கும் இல்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு நடத்தப்படும் 2%  பரிசோதனைகளில் தொற்று உறுதியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் ஏற்படும் கோவிட் அதிகரிப்பே இதற்கு காரணமென தெரிகிறது. 

7000 பேருக்கு காய்ச்சல்

தமிழ்நாட்டில் 10 நாட்களில் 23,833 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 10 லட்சம் பேரை பரிசோதித்துள்ளோம். இதில் 7000 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு, பூரண குணமடைந்து,  H3n2 வால் 15 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது. பதட்டப்பட தேவையில்லை. 2000 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை சேமித்து வைக்கும் திறன் நம் மருத்துவமனைகளில் உள்ளது. இரண்டாம் அலையின் போது தயார் செய்த படுக்கை வசதிகள் நம்மிடம் தயார் நிலையில் உள்ளன.மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன.

ஈ வி கே எஸ் இளங்கோவன் - நலமுடன் இருக்கிறார் 

ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. நேற்று கூட பேசினேன். நலமுடன் இருக்கிறார். டெல்லி சென்று வந்த போது அங்குள்ள காற்று மாசு காரணமாகவும் லேசான நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்றபடி நலமுடன் இருக்கிறார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com