அரை நூற்றாண்டு காலத்திற்கு திமுகவை எந்த கட்சியாலும் அசைக்க முடியாது..... அமைச்சர் சேகர்பாபு!!

அரை நூற்றாண்டு காலத்திற்கு திமுகவை எந்த கட்சியாலும் அசைக்க முடியாது..... அமைச்சர் சேகர்பாபு!!

ஆதரவற்றவர்களான யாரும் கவனிப்பு இல்லாமல் இருக்கும் நபர்களுக்கு வழங்கும் நலத்திட்ட உதவிகள் கடவுளுக்கு செய்யும் பணியை விட மேலானது.

நலத்திட்டம்:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க‌.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கருணை மனதோடு ஆதரிப்போம் கடமை உணர்வோடு நாம் அளிப்போம் என்னும் தலைப்பில் 2500 பயனாளர்களுக்கும், 15 ஆதரவற்ற இல்லங்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பங்கேற்றோர்:

சென்னை நம்மாழ்வார்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும்‌ தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் சேகர்பாபு:

தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் திமுக இருந்தாலும்,  இல்லாவிட்டாலும் மக்களுக்கான நலத்திட்டங்களை வாரி வழங்கி வருகிறது எனவும் வெள்ளப்பெருக்கு, இயற்கை சீற்றங்கள், கொரோனா பெரும் தொற்று என மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் சமயத்தில் துணை நின்று, மக்களுக்கான நிவாரண பணிகளை வழங்கியது திமுக அரசு எனவும் தெரிவித்தார்.  மேலும் தமிழ்நாட்டில் இன்னும் அரை நூற்றாண்டு காலத்திற்கு திமுகவை எந்த கட்சியாலும் அசைக்க முடியாது எனவும் கூறினார் அமைச்சர் சேகர் பாபு.

அமைச்சர் கே.என்.நேரு:

முதலமைச்சருக்கு பிறந்தநாள் அவரை பாராட்டுவதை விட, தலைவரால் நேசிக்கப்படுபவர்களை உதவுவதே மகிழ்ச்சி எனவும் உங்களை போன்ற ஏழை எளிய மக்களின் வாழ்த்துகள் இருந்தால் போதும் நம் முதலமைச்சருக்கு எனவும் தெரிவித்தார்.

மேலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் எனத் தெரிவித்த அமைச்சர் நேரு ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 85 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம் எனவும் கூறினார்.

ஆதரவற்றவர்களான யாரும் கவனிப்பு இல்லாமல் இருக்கும் நபர்களுக்கு வழங்கும் நலத்திட்ட உதவிகள் கடவுளுக்கு செய்யும் பணியை விட மேலானது எனவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com