ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிச்சதுக்கே 500 போலீஸ் காவலா?

ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிச்சதுக்கே 500 போலீஸ் காவலா?
Published on
Updated on
1 min read

2 நாள் சிதம்பர பயணம் 

இரண்டு நாள் பயணமாக நேற்று சிதம்பரம் வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று இரவு சிதம்பரத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி அறக்கட்டளை விழாவில் பங்கேற்றார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார்.

இன்று காலை அங்கிருந்து புறப்பட்ட அவர், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தனது மனைவியுடன் வந்தார். அவருக்கு கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் மேள, தாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை அளித்து மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் கோயிலுக்குள் சென்ற அவர், சட்டையை கழற்றி விட்டு கோயிலின் கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசனம் செய்தார.பின்னர் கீழே வந்த அவருக்கு கோயில் தீட்சிதர்கள் பிரசாதம் வழங்கினர்.

இதையடுத்து கோயிலை விட்டு வெளியே வந்த அவர், மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார்.இதைத்தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, சிதம்பரம் நகரில் ஓமக்குளம் என்ற இடத்தில் உள்ள நந்தனார் மடத்திற்கு செல்கிறார். அங்கு மடத்தை பார்வையிட்டு விட்டு, அங்குள்ள சுவாமி  சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்தார்.

200 போலீஸ் பாதுகாப்பு

மார்க்சியம் குறித்து தமிழக ஆளுநர் ரவி பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இதனால் சிதம்பரத்தில் இன்று ஆளுநர் வருகையின்போது கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது. இதனால் விழுப்புரம் சரக போலீஸ் டிஐஜி பாண்டியன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கடலூர் ராஜாராம், கள்ளக்குறிச்சி மோகன்ராஜ் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com