உலகக்கோப்பை தொடரின் தொடக்க விழா; இன்று தொடக்கம்!

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் திருவிழாவாக கொண்டாடும் உலகக்கோப்பை தொடரின் தொடக்க விழா ஆமதாபாத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

அதற்கு முன்பாக இன்று இரவு 7 மணிக்கு ஆமதாபாத்தில் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் வாரியமும், ஐசிசியும் செய்துள்ளது. இதில் லேஷர் ஷோ, வாணவேடிக்கை மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

இந்தி நடிகர் ரன்வீர் சிங், நடிகை தமன்னா நடனமாடுகிறார்கள். ஆஷா போஸ்லே, ஸ்ரேயா கோஷல், அரிஜிங்சிங், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் இசை வெள்ளத்துக்கு மத்தியில் பாடல்கள் பாடி ரசிகர்களை குதூகலப்படுத்த உள்ளனர். மேலும் விழாவின் முக்கிய அம்சமாக 10 அணிகளின் கேப்டன்கள் அறிமுக நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. 

தொடக்க போட்டிக்கான டிக்கெட் எடுத்துள்ள ரசிகர்கள் தொடக்க விழாவை காண அனுமதிக்கப்படுவார்கள். கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், ஐசிசி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com