" செங்கோல் குடியரசுத் தலைவர் கையில் தான் சென்றிருக்க வேண்டும்; பிரதமர் கையில் அல்ல " - கே. எஸ். அழகிரி.

" செங்கோல் குடியரசுத் தலைவர் கையில் தான் சென்றிருக்க வேண்டும்; பிரதமர் கையில் அல்ல " -  கே. எஸ். அழகிரி.

நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்து தமிழ் மரபுகளை கடைப்பிடிப்பதாக பிரதமர் மோடி சொல்வது விளம்பரத்திற்காக மட்டுமே; உண்மையில் அல்ல என காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி கூறியுள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,....

" நாடாளுமன்றத்தில் புதிய கட்டிடம் திறக்கப்படுகிறது; ஆனால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான எதிர்கட்சிகள் அதை புறக்கணித்துள்ளனர். தேசத்தில் நடைபெறும் ஒரு மாபெரும் நிகழ்வை புறக்கணிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல எனவும், தேசத்தை உருவாக்கிய சிற்பிகளில் நாங்களும் ஒருவர் என்றும், காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல, பொதுவுடமை கட்சிகள்; பல்வேறு மாநில கட்சிகள்; திராவிட கட்சிகள்; எல்லாரும் இந்த நாட்டினுடைய சுதந்திரத்திற்காக போராடியுள்ளனர்,"  எனது தெரிவித்தார்.

மேலும், 70 ஆண்டுகளாக சில மரபுகளை பின்பற்றி வருகிறோம். பாராளுமன்ற குழு நடைபெறும் போது குடியரசு தலைவர் தான் தலைமை வகிப்பார். அதில் பேசுகிற உரிமை குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. வெளிநாட்டு தலைவர்கள் பாராளுமன்றத்திற்கு வந்து உரையாற்றும் போதும் அடுத்த உரிமை குடியரசுத் தலைவருக்கு தான் வழங்கப்படும். இதுதான் மரபும் கூட. பாராளுமன்றம் என்பது இரண்டு அவைகளையும் உள்ளடக்கியது. இரண்டு அவைகளும் நடைபெற வேண்டும் என்றால், அதனுடைய பொறுப்பு குடியரசு தலைவருக்கு தான் உள்ளது " என்றும், 

மேலும், " இந்த மரபினை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இருந்து தொடங்கினோம், பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இருந்து இந்த மரபை பின்பற்றப்படுகிறது, ஆனால் மரபினை பின்பற்றாமல் இவர்கள் மோடி பெயர் வர வேண்டும் என்று இப்படி செய்துள்ளனர் ", என விமர்சித்தார்.  

தொடர்ந்து பேசிய அவர், " இவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட நபர் தான் குடியரசுத் தலைவர் இவர்களாகவே அவரை மறுக்கின்றனர். இன்று குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இது தவறான விஷயம் உலக நாடுகள் இதனை பார்ப்பார்கள். ஆனால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்;  நம்மை பற்றி தரக்குறைவாக நினைத்து விடுவார்கள். மோடி ஆட்சியில் இத்தனை ஆண்டுகள் அவர்கள் ஆண்டு விட்டார்கள்;  இன்னும் ஓராண்டு காலம் தான் இருக்கிறது", என்றும் கூறினார். 

" காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவினுடைய அரசியல் சாசன சட்டம் எழுதுவதற்கு அன்று அம்பேத்கர் அழைக்கப்பட்டார்: அவர் காங்கிரஸ்காரர் அல்ல; காங்கிரஸ்ருக்கு எதிரானவர். காங்கிரஸாருக்கு துணையாக கிருஷ்ணசாமி ஐயரே அன்று இருந்தார்.  ஆனால் சமூகத்தின் உடைய உணர்வுகளை நன்கு புரிந்தவர் மாமேதை அண்ணல் அம்பேத்கர், காங்கிரஸ் உடன் அவருக்கு வேறுபாடு இருக்கலாம், ஆனால்,  அவருடைய சட்டவல்லமையைப்  பயன்படுத்த வேண்டும் என்று அவரை இந்திய அரசியல் சாசன சட்டம் எழுத வைத்தார் ராஜாஜி ", எனக் குறிப்பிட்டார். 

மேலும், செங்கோல் குடியரசுத் தலைவர் கையில் தான் சென்றிருக்க வேண்டும்; பிரதமர் கையில் அல்ல எனவும் கூறினார். மோடி செய்வது சர்வதிகாரம் தான் என சாடியவர்,  இன்னும் ஒரு சில தினங்களில் முப்படைகளுக்கும் தலைவர் நான் என்று சொல்வாரா ??? எனவும் கேள்வி எழுப்பினார். 

அதனைத்தொடர்ந்து,  " தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று நாங்கள் அதை எதிர்க்க போவதில்லை, சமஸ்கிருத்திற்கு 1400 கோடி நிதி, தமிழை பலகோடி நபர்கள் பேசுகிறார்கள் அதிக நிதியை தமிழுக்கு தான் கொடுத்திருக்க வேண்டும். எனவே, விளம்பரத்திற்காகத்தான்  இதனை செய்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com