தந்தையின் குடிப்பழக்கத்தை கைவிட தன் உயிரை மாய்த்துக் கொண்ட மகள்....!

தந்தையின் குடிப்பழக்கத்தை கைவிட  தன் உயிரை மாய்த்துக் கொண்ட மகள்....!

தந்தையின் குடிப்பழக்கத்தை கைவிட கடிதம் எழுதிவிட்டு, தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக் கொண்ட மகள். குடியாத்தம் அருகே நிகழ்த்த சோகம். 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு  கூலி  தொழிலாளர் , இவருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. மேலும், இவருக்கு, விஷ்ணு பிரியா என்ற மகளும் உள்ளார். இந்நிலையில்,  விஷ்ணு பிரியா குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 410 மதிப்பெண் பெற்றுள்ளார்.

இவ்வாறிருக்க, விஷ்ணு பிரியாவின் தந்தை,  குடிப்பழக்கத்தால் வீட்டில் அவ்வப்போது சண்டை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் விஷ்ணு பிரியா வெகு நாட்களாகவே  மனவருத்தத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில், மன வேதனை அடைந்த விஷ்ணு பிரியா இன்று மாலை கடிதம் எழுதி வைத்து அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதில் " எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும் , எனது குடும்பம் எப்பொழுது  மகிழ்ச்சியாக இருக்கின்றதோ அப்போதுதான் எனது ஆத்மா சாந்தி அடையும்",  என கடிதம் எழுதி வைத்துள்ளார். 

இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,  இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது அப்பாவின் குடிப்பழக்கத்தை கைவிடக்கோரி மகள் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் ,இகுந்த வேதனையளிக்கிறது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com