கிருஷ்ணகிரி அருகே நிகழந்த சோகம்...!  வீட்டின் சுவர் இடிந்து விழுந்து குழந்தை பலி...!

கிருஷ்ணகிரி அருகே நிகழந்த சோகம்...! வீட்டின் சுவர் இடிந்து விழுந்து குழந்தை பலி...!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தளி அடுத்துள்ள பசவனதொட்டி கிராமத்தைச்  சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுரேஷ், இவரது மனைவி சசிகலா இவர்களுக்கு 3 வயது ஆண் குழந்தை ரக்ஷித் உள்பட இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். 

கடந்த இரண்டு நாட்களாக தளிசுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. கனமழைக்குசுரேஷின் பழமையான ஓட்டு வீட்டின் சுவர்கள் நனைந்து போயிருந்தன. நேற்று மாலை சுரேஷின் குழந்தைகள் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தன அப்போது திடீரென வீட்டின் முன் பகுதியில் இருந்த சுவர் இடிந்து 3 வயது குழந்தை ரக்ஷித் மீது விழுந்துள்ளது.

இதில் அந்த குழந்தை பலத்த காயம் அடைந்தது. இதனையடுத்துகுழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகதெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து தளிபோலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com