உலகக் கோப்பை கால்பந்து போட்டி...! இணையதளங்களுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்..!

உலகக் கோப்பை கால்பந்து போட்டி...! இணையதளங்களுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்..!
Published on
Updated on
1 min read

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாக பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் இணையதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சர்வதேச கால்பந்து சம்மேளனம், உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை கத்தார் நாட்டில் நடத்துகிறது. இந்த போட்டிகள் நாளை முதல் துவங்க உள்ளன. இந்த போட்டிகளை வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஒளிபரப்புவதற்கான உரிமையை வையாகாம் -18 நிறுவனம் பெற்றுள்ளது. பெருந்தொகையை முதலீடு செய்து உரிமம் பெற்றுள்ள நிலையில், சட்டவிரோதமாக, இந்த போட்டிகளை பதிவு செய்யவும், மறு ஒளிபரப்பு செய்யவும் இணையதளங்களுக்கு தடைவிதிக்க வேண்டுமென வையாகாம் -18 நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

இது குறித்த அந்த மனுவில், 12,037 இணையதள நிறுவனங்கள் தங்களின் காப்புரிமையை மீறும் வகையில் செயல்படுமென அச்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை பதிவு செய்யவும், ஒளிபரப்பவும், பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யவும், இணையதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com