நாகையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்..! - மீன்வளத்துறை எச்சரிக்கை.

நாகையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்..!  - மீன்வளத்துறை எச்சரிக்கை.

 நாகப்பட்டினம் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இது காற்றழுத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.இதன் காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும்,  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 'இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை(திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, அது வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் நேற்று முதல், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். எனவே கடலுக்கு சென்ற பைபர் படகு மீனவர்கள் கரை திரும்ப வேண்டும்'. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து கடலில் மீன்பிடிக்க சென்ற நாகை பைபர் படகு மீனவர்கள் கரை திரும்பினர். தொடர்ந்து தங்களது படகுகளை கரைப்பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com