இன்றைய சூழலில் எல்லோரும் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், அடிப்படை உரிமைகள், சட்டங்கள் இதை பற்றியெல்லாம் பேச முதன்மை காரணமே நமக்கு கிடைத்த சுதந்திரம் தான். இந்த சுதந்திரத்தை நமக்கு பெற்று தர போராடியவர்கள் ஏராளம், அதில் தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியவர்களுள் அனைவராலும் குறிப்பிடத்தக்க ஒரு வீரர் தான் “தீரன் சின்னமலை” அவர்கள்.
சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையம், என்னும் சிற்றூரில்( ஏப்ரல் 17) 1756 ஆம் பிறந்த இவர் சிறுவயதிலேயே மல்யுத்தம், வில்வித்தை,வாள்வித்தை,சிலம்பாட்டம் போன்ற கலைகளில் சிறந்து விளங்கியுள்ளார்.
சின்னமலை பெயர் காரணம்
கொங்குநாடு, மைசூரார் ஆட்சியின் கீழ் இருந்த போது சங்கரகிரி வழியாகத்தான் வரிப்பணம் செல்லும் அப்போது கொங்கு நாட்டின் வரிப்பணத்தை எடுத்துச்செல்லும்,வரி தண்டல்காரரை மறித்து அவரிடம் இருந்த வரிப்பணத்தை பறித்து மக்களிடம் வழங்கினார் சின்னமலை.
பின்னர் அவரிடம் வரிப்பணம் பற்றி ஆங்கிலேயர்கள் கேட்டால் அவர்களிடம் “சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை பறித்ததாக சொல்” என சொல்லி அனுப்பினார். அன்று முதல் அனைவரும் இவரை சின்ன மலை என அழைக்கடத்தொடங்கினர்.
திப்பு சுல்தானுக்கு உதவி
ஹைதரலியின் மறைவுக்கு பின்னால் ஆட்சிக்கு வந்த திப்பு சுல்தானும் ஆங்கிலேய படையை எதிர்த்து போராடினார். கொங்கு நாட்டில் உள்ள இளைஞர்களை திரட்டிய சின்னமலை மைசூர் போரில் திப்புவுக்கு உறுதுணையாக இருந்தார்.
மழவல்லி,சீரங்கப்பட்டினம்,சித்தேசுவரம் போன்ற போர்களில் வெல்ல திப்புவுக்கு கொங்கு நாட்டு படையே உதவிபுரிந்தது.
ஓடாநிலைக் கோட்டை
திப்பு சுல்தானின் மறைவுக்கு பிறகு, அரச்சலூர் அருகே கோட்டை கட்டி போருக்கு தயாரானார்,பட்டாலிக் கட்டிலில் பெரும் வீரர்கள் படைக்கு பயிற்சி அளித்து போருக்கு தயார் செய்தார்.
அதுமட்டுமல்லாமல் பிரெஞ்சுக்காரர்கள் துணையோடு, ஆயுதங்களையும் பீரங்கிகளை தயார்செய்து கொண்டார். 1801 மற்றும் 1802 ல் நடைபெற்ற போர்களில் ஆங்கிலேயர்களை வென்று வீழ்த்தினார்.
சமூகப்பணியும் ஒற்றுமையும்
இடைவிடாத போர்க்களங்களில், அனைவரயும் சமமாக நடந்த வேண்டும் யாருக்கும் யாரும் உயர்ந்தவர்கள் இல்லை தாழ்ந்தவர்கள் இல்லை என்ற கொள்கை படி செயல்பட்டவர்.
கோயில்கள் கட்டவும், கோயில்களின் திருப்பணிக்கும் உதவினார்.தமிழையும் தமிழ் புலவர்களையும் ஆதரித்து முக்கியத்துவம் கொடுத்தார்.
சூழ்ச்சியால் வீழ்ச்சி
இவ்வாறு வீரத்திலும், படைப்பலத்திலும் சிறந்து விளங்கிய சின்னமலையை நேரடியாக வீழ்த்தமுடியாது என முடிவெடுத்த ஆங்கிலேயர்கள் ஒரு சதித்திட்டம் திட்டினர்.
ஒரு சமையல்காரரின் உதவியுடன் தீரன் சின்னமலையை கைது செய்த ஆங்கிலேயே படை, ஆங்கிலேயர்களை முதல் முதலில் எதிர்த்த இடத்திலே சின்னமலையை தூக்கிலிட்டு வீழ்த்தி தங்கள் பழியை தீர்த்துக்கொண்டனர்.
பிறந்தநாள் வாழ்த்து
தீரன் சின்னமலை அவர்களின் 269 -ஆவது பிறந்த நாளான இன்று தமிழ் நாடு முழுவதும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரை நினைவு கூறும் விதமாக அவருடைய படத்திற்கும், திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்