கவர் ஸ்டோரி

தொடரும் சட்ட போராட்டம்..! நீதிமன்றத்தை நம்பி உள்ள ஓபிஎஸ்..!

Malaimurasu Seithigal TV

அதிமுக பொதுக்குழு வழக்கு உயர்நீதிமன்றத்தில் நாந்துகொண்டு இருக்கும் வேளையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மற்றொரு வழக்கிற்காக மேல்முறையீடு.

அதிமுக பொதுக்குழு வழக்கு:

சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11 இல் அதிமுக பொதுக்குழு, செயற்குழுகு கூட்டம் நடைபெற்றது. அதில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் இடைகாலப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.

அதிமுக அலுவலகம் சீல்:

அதிமுக பொதுகுழுக் கூட்டம் நடைபெற்ற நேரத்தில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நுழைந்ததால், இபிஎஸ் ஆதரவாளர்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, இரு தரப்பினருக்கும் மோதல் மூண்டது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி வருவாய் கோட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தார். 

சாவி கோரி மனு:

அதிமுக தலைமை அலுவலகத்தின் சீலை அகற்றக் கோரியும், எம்.ஜி.ஆர் மாளிகைக்கு உரிமை கோரி, சாவியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஓபிஎஸ், இபிஎஸ் இரு தரப்பில் இருந்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இபிஎஸ்க்கு சாதகம்:

இரு தரப்பு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சதீஸ் குமார்  சென்னை உயர்நீதிமன்றம், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் அதிமுக தலைமையை அலுவலகத்திற்கு உரிமை கோர முடியாது என்பதால், ஓபிஎஸ்சின் மனுவை நிராகரித்து விட்டு, எட்டப்படி பழனிசாமியிடன் அதிமுக தலைமை அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன்படி ஜூலை 20 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலக சாவி ஓபிஎஸ் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நானே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்:

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் ஓபிஎஸ். அந்த மனுவில், சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தது தவறு என்றும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற ,முறையில் நானே அதிமுக தலைமை பொறுப்பில் உள்ளேன். அதனால் தலைமை அலுவலகத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

விசாரணை எப்போது?

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடுத்த மேல்முறையீடு வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை போல, இந்த வழக்கும் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா? அல்லது உச்சநீதிமன்றமே விசாரிக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.