sea hourse(hippocampus) 
கவர் ஸ்டோரி

என்னது ஆண்களுக்கு பிரசவமா! உலகத்துல இப்படி ஒரு அதிசயம் இயற்கையாவே நடக்குமா என்ன? நம்ப முடியாத சுவாரஸ்யம்!

ஒரு ஆண் கடற்குதிரை ஒரு முறை கருத்தரிக்கும் போது 100 முதல் 1,000 முட்டைகளை சுமக்கிறது.

Mahalakshmi Somasundaram

கடலில் வாழும் ஆயிரக்கணக்கான கண் கவர் உயிரினங்களில்,ஒரு அழகிய உயிரினங்கள் தான் கடல் குதிரைகள், பொதுவாக சொல்ல போனால், இவையும் ஒரு வகை மீன்கள் தான். ஆனால் இவைகளின் வாய்ப்பகுதி சற்று நீண்டும்,மார்பு பகுதி பெருத்தும், வால் சுருண்டும் இருப்பதனால்.பார்ப்பதற்கு இந்த ஹிப்போகேம்பஸ் குதிரை போல காட்சியளிக்கிறது.

கடல் குதிரை பற்றி நமக்கு தெரிந்தது, எல்லாம் இவை கடலில் வாழும், அழகாக இருக்கும், சிறியதாக இருக்கும் என்பது மட்டும் தான். ஆனால் இவற்றை பற்றி தெரியாத பல அரிய தகவல்களும் உள்ளது. அந்த சுவாரஸ்யமான தகவல்களை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோமா.

ஆண் கடற்குதிரைகளின் கர்ப்பம்:

பிரசவம்,கருத்தரிப்பு என்றாலே பெண்களுக்கான செயல்பாடுகள், என்று பார்க்கப்படும்.நமது பார்வையை மாற்றும் விதமாக தான் இந்த கடல் குதிரைகளின் கருவுறுதல் அமைந்திருக்கிறது.அனைத்து உயிரினங்களிலும் பெண் உயிரிகள் தான், கருக்களை சுமக்கும்.ஆனால் கடல் குதிரையில் ஆண்கள் தான் கருத்தரிக்கும்.

பெண் கடற்குதிரை தனது முட்டைகளை ஆணின் உடலில் உள்ள ஒரு சிறப்பு பையில் (brood pouch) இடுகிறது. இந்தப் பையில் முட்டைகள் கருவாகி, உயிரிகளாக வளர்கின்றன. ஒரு ஆண் கடற்குதிரை ஒரு முறை கருத்தரிக்கும் போது 100 முதல் 1,000 முட்டைகளை சுமக்கிறது.

கருத்தரித்த ஆண் கடற்குதிரை முட்டைகளுக்கு ஆக்ஸிஜன், ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பு வழங்கி உயிரியாக வளர்கிறது 

மோனோகெமி உயிரினங்கள்: 

கடற்குதிரைகள் இனப்பெருக்கத்திற்கு முன் ஒரு அழகிய "நடனம்" ஆடுகின்றன, இந்த நிகழ்வின் ஓத்து தனக்கு பிடித்த ஜோடிகளை உயிரினங்கள் தேர்ந்தெடுக்கின்றன. பின்னர் இரு கடற்குதிரைகளும் ஒன்றை ஒன்று சுற்றி நீந்தி, ஒரே நேரத்தில் நகர்கின்றன.

இந்த நடனத்தின் முடிவில், பெண் கடற்குதிரை தனது முட்டைகளை  அவை தேர்ந்தெடுத்த ஆணின் பையில் இடுகிறது. இந்த செயல்முறை கடல்குதிரைக்கான ஒரு சிறப்பான நிகழ்வாக கருதப்படுகிறது.

பிறப்பு செயல்முறை: 

ஆண் கடற்குதிரை தனது உடலை சுருக்கி விரிவாக்கி, உயிரிகளை  ஒரு வெடிப்பு போன்ற செயல்முறையில் பிரசவிக்கிறது . இது ஒரு தீவிரமான செயல்முறையாகும், இதில் நூற்றுக்கணக்கான உயிரிகள், ஒரே நேரத்தில் பிறக்கின்றன.

இவளவு உயிரினங்கள் பிறந்தாலும் குறைந்த அளவு உயிரினங்களே முதிர் உயிரியாக மாறுகின்றன. காரணம் பெரும்பாலான உயிரிகள் பிற மீன்களால் உண்ணப்படுவதால், உயிர்வாழ்வு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. 1% க்கும் குறைவான உயிரிகளே முதிர்ந்த வயதை அடைகின்றன.

முக்கியத்துவம்:

கடற்குதிரைகள் இனம் மாசுபாடு, வாழிட இழப்பு மற்றும் அதிகப்படியான மீன்பிடிப்பு ஆகியவற்றால் அழிந்து வருகிறது.  கடல் குதிரையின் பல சிற்றினங்கள்  அழிவின் விளிம்பில் உள்ளன.

கடற்குதிரைகளின் கர்ப்பம் இயற்கையின் மிகவும் ஆச்சரியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆண் கடற்குதிரைகள் முட்டைகளைச் சுமந்து, உயிரிகளை பெறுவது உயிரியல் ஆர்வலர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான ஆய்வுப் பொருளாக உள்ளது. இந்த அற்புதமான உயிரினங்களைப் பாதுகாப்பது, கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

எனவே உலகளவில் பல அமைப்புகள் கடற்குதிரைகளைப் பாதுகாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்