உத்தரபிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கடந்த வியாழக்கிழமை அன்று 13 வயது சிறுமியை மாந்திரீகம் செயலில் ஈடுபடும் 55 வயது நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் நோயை குணப்படுத்துவதாக கூறி பேயோட்டுபவர் ஒருவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
காவல்துறையின் விசாரணையின்படி, நரைனி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவரின் 13 வயது மகள் நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சில நாட்களாக சிறுமி சிகிக்சை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாய், அவளை தாத்தா பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அக்கம் பக்கத்தினர் பரசுராம் யாதவ் என்ற பேயோட்டுபவர், பேயோட்டுதல் மூலம் நோய்களை குணப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு சிறுமியை அழைத்து சென்றால் குணமாக வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் பேச்சை நம்பி, தாய் அந்த சிறுமியை சிகிச்சைக்காக யாதவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு 55 வயதான பரசுராம் யாதவ், அந்தப் பெண்ணுக்கு மாந்திரீகம் செய்வதாக கூறி தனியாக அழைத்து சென்றுள்ளார். சிறுமியை தாயிடமிருந்து விலக்கி ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்ற அவர், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அப்போது சிறுமி கூச்சலிட்டதையடுத்து, அவளது தாய் சம்பவ இடத்திற்கு விரைந்து ஒட்டியுள்ளார். அங்கு அவரை பார்த்ததும் யாதவ் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தன் தாயிடம் சல்லி அழுதுள்ளார். அதையடுத்து, தாயும் மகளும் அன்றிரவே காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். பிசந்தா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.
சாமியார் யாதவ் மீது பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டம் மற்றும் பிற குற்ற தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அந்த சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளார். சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக உள்ள யாதவைக் கைது செய்வதற்காக, சந்தேகிக்கப்படும் பதுங்குமிடங்களில் இரண்டு காவல் குழுக்கள் சோதனைகளை நடத்தி வருவதாக காவல் ஆய்வாளர் கிருஷ்ணகாந்த் திரிபாதி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்