“ரேஷன் கடையில் வைத்து சீரழிக்கப்பட்ட பெண்” - ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ஊழியர்..!

அந்த பெண் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
“ரேஷன் கடையில் வைத்து சீரழிக்கப்பட்ட பெண்” - ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ஊழியர்..!
Published on: 
Updated on: 
1 min read

கணவனை இழந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ரேஷன் கடை ஊழியர் கைது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய இளைஞரை மகளிர் காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மானாமதுரை அருகே உள்ள மேலநெட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வேந்திரன். இவர் இளையான்குடியை அடுத்துள்ள திருவள்ளூர் கிராமத்தில் செயல்படும் ரேசன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கடைக்கு பொருட்கள் வாங்க வந்த 30 வயது பெண் ஒருவரை, கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடைக்குள்ளேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இதனை அடுத்து அவர் கர்ப்பமாகி அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் இவரை செல்வேந்திரன் திருமணம் செய்ய மறுத்த நிலையில் அந்த பெண் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து செல்வேந்திரனை மகளிர் காவல்துறையினர் இன்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com