குஜராத்தின் வதோதராவில் உள்ள ஒரு கிராமத்தில், தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் 13 வயது மகளின் வாயை அடைத்தது அந்த பெண்ணின் தந்தை பாலியல் வன்கொடுமை செய்த செய்தி அக்கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வன்கொடுமையின் போது, குழந்தையின் தாய் அவரைக் கையும் களவுமாகப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. காவல்துறை புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் வாயில் ஒரு துணியைத் திணித்து அவளைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
வதோதராவின் தேசர் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, ஜூன் 28 ஆம் தேதி மாலையில் குடும்பப் பிரச்சினை தொடர்பாக தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சண்டை அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்காக, அப்பெண் வீட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள உறவுக்கார பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரின் 13 வயது மகளும் 10 வயது மகனும் வீட்டில் இருந்துள்ளனர். புகாரின்படி, அப்பெண் நள்ளிரவு வாக்கில் தனது சகோதரியுடன் திரும்பி வந்த போது, வீட்டிற்குள் தனது கணவர் மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். சிறுமியின் வாயில் துணி திணிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கொடூரத்தை தாயும் அவளது சகோதரியையும் பார்த்தவுடன் குற்றம் சாட்டப்பட்டவர் உடனடியாகத் தப்பி ஓடியுள்ளார். பின்னர், தாய் தன் மகளின் வாயிலிருந்த துணியை அகற்றி, அவளை மீட்டு ஆறுதல் கூறியுள்ளார்.
பின்னர் அந்த சிறுமி, தன் தம்பி தூங்கிய பிறகு, தன் தந்தை தன்னைக் கட்டிப் போட்டு, தன் விருப்பத்திற்கு மாறாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தன் தாயிடம் அழுது கொண்டே கூறியுள்ளார். உதவி கேட்டு கூச்சலிட்டதால் தனது வாய் கட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து தாய் தனது சகோதரி மற்றும் மைத்துனருடன் தேசார் காவல் நிலையத்தை அணுகி, தனது கணவருக்கு எதிராக புகார் அளித்தார்.இதையடுத்து காவல்துறை சட்ட நடவடிக்கைகளை தொடங்கி, உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்தது. இந்த சம்பவம் குறித்த தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.