dharshini and nithin 
க்ரைம்

“என் மகனை காதலிக்க நீ யாரு.. என்ன தகுதி இருக்கு” - காதலியை சரமாரியாக தாக்கிய காதலனின் தாய்.. மன உளைச்சலில் 15 வயது சிறுமி தற்கொலை!

நித்தினின் தாய் மற்றும் அவரது சகோதரி சிறுமியை தகாத வார்த்தைகளாகளால் பேசி வம்பிழுத்து...

Mahalakshmi Somasundaram

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சக்கரகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி இவருடைய மனைவி கோமதி இந்த தம்பதியருக்கு ஐந்து மகள்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூத்த இரண்டு மகளுக்கு திருமண நடைபெற்றதாக சொல்லப்படும் நிலையில் இரண்டு மகள்கள் படித்து வருகின்றனர். இதில் கடைசி மகள் 15 வயதுடைய தர்ஷினி அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த நிலையில் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் 19 வயதுடைய நித்தின் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது நட்பானது காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் தொடர்ந்து வெளியில் சுற்றி வந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவர்களது காதல் நித்தினின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இரு வீட்டிற்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நித்தினின் தாய் மற்றும் அவரது சகோதரி சிறுமியை தகாத வார்த்தைகளாகளால் பேசி வம்பிழுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல இரண்டு குடும்பத்திற்கு இடையே காதல் விவகாரம் குறித்து மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் நித்தினின் தாய் ரேவதி மற்றும் அவரது சகோதரி சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் “என் மகனை காதலிக்க நீ யாரு.. என்ன தகுதி இருக்கு” என கேட்டு தகாத வார்தைகளால் பேசியுள்ளனர். இந்த தகராறின் போது ரேவதியை நெஞ்சின் மீது தாக்கியதால் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றதாக தெரிகிறது.

revathi and elakiya

தொடர்ந்து காதலனின் தாய் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனம் உடைந்த 15 வயது சிறு தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஆவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்த நிலையில் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் நித்தின் அவருடைய தாய் ரேவதி மற்றும் சகோதரி இலக்கியா ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் பிரச்சனையில் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.