கர்நாடகா மாநிலம் பெங்களூரு சந்தபுர பகுதியில் இருந்த ஒரு சூட்கேசில் 17 வயதுடைய ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் அந்த சூட்கேசை இங்கு கொண்டு வந்து போட்டவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்தது பீகார் பகுதியை சேர்ந்த 17 வயது இளம் பெண் என்பதும் இவர் கடந்த மாதம் தனது காதலனான ஆஷிக் குமார் என்பவருடன் கர்நாடக வந்ததும், காதலனான ஆஷிக் குமரே அவரை கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசிச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் பீகாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஆஷிக் அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம் பெண்ணை தனது காதல் வலையில் சிக்க வைத்துள்ளார்.
ஆஷிக்கிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் வேலைக்கு வந்த இடத்தில் ஆஷிக் 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆஷிக்கிற்கு திருமணமானது சிறுமிக்கு தெரிய வந்த நிலையில் அவர் ஆஷிக்கை விட்டு பிரியா முடிவெடுத்துள்ளார். அப்போது ஆஷிக் “எனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் நீதான் என முக்கியம் நாம் தனியாக வீடு எடுத்து வாழலாம்” என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இந்நிலையில் சிறுமியை பீகாரில் இருந்து கர்நாடகாவில் இருக்கும் தனது உறவினரான முகேஷ் குமார் என்பவர் வீட்டிற்கு அழைத்து வந்த ஆஷிக். சில நாட்கள் சிறுமியை நன்றாக பார்த்துக் கொண்டு தன்னுடன் உடலுறவு வைத்து கொள்ள சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதற்கு சிறுமி மறுக்கவே சிறுமியை அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து தலையில் தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
கொலை என்பதை மறைக்க திட்டமிட்ட ஆஷிக் மற்றும் அவரது நண்பர்கள் சிறுமியை தூக்கில் தொங்க விட திட்டமிட்டுள்ளனர். அப்போது திடீரென வீட்டின் உரிமையாளர் அங்கு வரவே உடலை மறைத்து வைத்த ஆஷிக் குமார். பின்னர் அந்த உடலை ஒரு சூட்கேசில் போட்டு சந்தபுர ரயில் நிலையத்திற்கு எடுத்து சென்று வீசியுள்ளார். இவர்கள் சத்தம் கேட்டு வீட்டிற்கு சென்ற உரிமையாளர் இவர்கள் மீது சந்தேகேமடைந்து ஆஷிக் மற்றும் நண்பர்களை நிற்க வைத்து புகைப்படம் எடுத்துள்ளார்.
போலீசார் விசாரணையின் போது இந்த வீட்டின் உரிமையாளர் எடுத்த புகைப்படம் முக்கிய பங்கு வகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சூட்கேசில் பெண் இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் பீகாரில் இருந்து பெங்களூரு வந்த சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியின் உடலை அவர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் ஆஷிக் மற்றும் முகேஷை கைது செய்த போலீசார் இந்த கொலைக்கு உதவியாக இருந்த மற்ற நண்பர்கள் மற்றும் பீகாரில் இருந்து சிறுமியை பெங்களூருவிற்கு அழைத்து வர உதவிய நபர்கள் என அனைவரின் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.