
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் பிரசித்தி பெற்ற நாகநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வரும் தியாகராஜன் என்பவர் அதே கோவிலில் தூய்மை பணி மேற்கொள்ள வந்த 25 வயதான பெண் சாந்தியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். கோவில் வளாகத்தில் இருக்கும் போது இரண்டு அர்த்தங்கள் தரும் வார்த்தைகள் பேசுவது பாலியல் ரீதியாக பேசுவது போன்ற செயல்பாடுகளை செய்துள்ளார்.
தனது வீட்டிற்கு சென்று உணவு எடுத்து வர சொல்லி சாந்தியை அனுப்பிவிட்டு பின்னர் தானும் சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். “ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டதற்கு எனக்கு உன்னை பிடித்திருக்கிறது திருமணம் செய்து கொள்ளலாம் அறநிலைய துறையில் நிரந்தர வேலை வாங்கி தருகிறேன்” என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இது போல பெண்ணிடம் பலமுறை அத்துமீறிய தியாகராஜன் பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றியுள்ளார்.
சாந்தி இதுகுறித்து “நீங்கள் என்னை ஏமாற்ற நினைத்தால் நான் போலீசில் புகாரளித்து விடுவேன் “ என கூறியதற்கு தியகராஜன் “யார் கிட்ட வேணாலும் போய் சொல்லு எனக்கு எல்லா இடத்திலும் ஆள் இருக்கு” என மிரட்டியுள்ளார் சாந்தி ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் தியாகராஜன் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். தியாகராஜனை தனிப்படை அமைத்து தேடி வந்த காவல்துறையினர் நேற்று இரவு பாண்டிச்சேரியில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.
தியாகராஜனை பாண்டிச்சேரியில் இருந்து திருப்பத்தூர் அழைத்து வந்த போலீசார் அவரிடம் சுமார் 10 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தியாகராஜனை வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். தியாகராஜனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணிடம் பாலியல் அது மீறலில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.