க்ரைம்

அண்ணன் கண்முன்னே 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! பாழடைந்த வீட்டுக்குள் அழைத்து சென்ற கொடூரன்

அவர்களை வழிமறித்து, தனது பைக்கில் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்

Muthu Lakshmi

மத்தியப் பிரதேசம் பிந்த் மாவட்டத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியை, அவளது குடும்பத்திற்கு அறிமுகமான ஒருவர் கடத்திச் சென்று, அண்ணன் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மெஹ்கான் காவல் நிலையப் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி நான்காம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். சம்பதாண்டு அந்த சிறுமி பள்ளி முடிந்து ஆறாம் வகுப்பு மாணவரான தனது அண்ணனுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ​​21 வயதான நபர் ஒருவர் அவர்களை வழிமறித்து, தனது பைக்கில் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். குடும்பத்தினருக்கு தெரிந்தவர் என்பதால் வாகனத்தில் வர ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களை அவர்களது இல்லத்தில் இறக்கி விடுவதற்கு பதிலாக, அவர்களைப் பாழடைந்த இடத்திற்கு அழைத்துச் சென்று அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அண்ணனின் கண்முன்னே அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து அதை அந்த சிறுவனை பார்க்க கட்டாயப்படுத்தி உள்ளார்.

11 வயது சிறுவன் எதிர்ப்பு தெரிவித்து தலையிட முயன்றபோது, ​​அந்த நபர் அவனையும் தாக்கியுள்ளார். பின்னர் அவர் அவர்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். பின்னர் சுயநினைவின்றி இருந்த தங்கையை கண்ட சிறுவன், குடும்பத்திநரிடன் சொல்வதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அதையடுத்து உறவினர்கள் அந்தச் சிறுமி சம்பவ இடத்திலேயே கிடப்பதை கண்டு, உடனடியாக அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சுகாதார அதிகாரிகள் மருத்துவப் பரிசோதனை மூலம் பாலியல் வன்கொடுமை நடந்ததை உறுதிப்படுத்தியதை அடுத்து, குடும்பத்தினர் இந்தச் சம்பவம் குறித்து மெஹ்கான் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பிந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் அதே கிராமத்தைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டது. மேலும் குடும்பத்தினருக்கு நன்கு அறிமுகமானவரும் ஆவார். பின்னர் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரது குற்றப் பின்னணிகளை விசாரித்து வருகின்றனர்.

நர்சிங்பூரின் கோட்டேகான் பகுதியில் ஆறு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து இந்த பிந்த் வழக்கு நிகழ்ந்துள்ளது. பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த மூன்றாம் வகுப்பு மாணவியை, வீட்டில் விடுவதாகக் கூறி 28 வயதான பக்கத்து வீட்டுக்காரரான அனு யாதவ் என்பவர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். அவர் அந்த மாணவியை காட்டுக்குள் அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்துக் கொன்றார்.

நர்சிங்பூர் காவல் கண்காணிப்பாளர் ரிஷிகேஷ் மீனா அமைத்த பல குழுக்களின் தாக்குதலில், சிறுமியின் உடல் மீட்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றவாளி கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பரவலாக அதிகரித்து வரும் வேளையில் இந்த இரண்டு சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்