

கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் இரு சகோதரர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. கான்பூர், 2021-ஆம் ஆண்டு எட்டாவாவில் திருமணமான பெண்ணை சுமார் கடத்தி வீட்டில் சிறைவைத்து மூன்று மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இரண்டு சகோதரர்களுக்கு விரைவு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அவர்களின் தாயாருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில், எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த அன்வார் மற்றும் சோட்டு ஆகிய இருவருக்கும் விரைவு நீதிமன்றம்-41-ன் நீதிபதி ராகேஷ் சிங் இந்த தண்டனை வழங்கினார். கூட்டுப் பாலியல் வன்புணர்வுக் குற்றத்திற்காக விதிக்கப்பட்ட 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன், தண்டனை பெற்ற ஒவ்வொருவருக்கும் நீதிமன்றம் ₹ 10,000 அபராதமும் விதித்தது. மேலும், முந்தைய இந்திய தண்டனைச் சட்டத்தின் 366-வது பிரிவின் கீழ் அவர்களுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், தலா ₹ 5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அவர்களின் தாயாரான உஷா தேவிக்கு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 368-ன் கீழ் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ₹ 2,000 அபராதமும், சட்டவிரோதமாக சிறைவைத்த குற்றத்திற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 342-ன் கீழ் ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்கும் போது, நீதிமன்றம் பாதிக்கப்பட்டவரின் சாட்சியத்தையும் மருத்துவ ஆதாரங்களையும் சார்ந்திருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் பெண் மூன்று பிள்ளைகளின் தாயானவர் என்று தெரிகிறது. அவர் 2021 மார்ச் 13 அன்று தனது இரண்டு வயது மகனுடன் கோவிந்த் நகரில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் அலுவலகத்திற்கு குடும்ப ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு மர்ம நபர் இருவரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடத்தப்பட்ட அந்தச் பெண்ணை எட்டாவாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு சகோதரர்களால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இதற்கு உடந்தையாக அவர்களின் தாய் உஷா தேவி இருந்துள்ளார்.
3 மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் அந்த குடும்பத்தினர் உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் அப்பெண் பக்கத்து வீட்டுக்காரரின் உதவியுடன் தனது குடும்பத்தினரை தொடர்புகொண்டு நடந்ததை கூறி கதறியுள்ளார். தன்னை காப்பாற்றுமாறு அழுதுள்ளார். குடும்பத்தினரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் அவரை எட்டாவாவிலிருந்து மீட்டு, குற்றம் சாட்டப்பட்ட தாய் உட்பட மூவரையும் கைது செய்துள்ளனர்.
அதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை “தனது மகள் கடத்தப்பட்டு, சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு, மூன்று மாதங்களாக தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றம் சாட்டி 2021 மே 12 புகார் அளித்துள்ளார். முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து காவல் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. தற்போது கைது செய்யப்பட்ட இரு சகோதரர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்த குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்