தந்தையுடனும் - வருங்கால கணவருடனும் சமந்தா கெர்ஷ்னர் தந்தையுடனும் - வருங்கால கணவருடனும் சமந்தா கெர்ஷ்னர்
க்ரைம்

"தந்தையுடன் உடலுறவு வைத்துக்கொள்ள போட்டி!" அவரையே திருமணம் செய்துகொண்ட மகள் - வேறு ஒருவருடன் 'குழந்தை பெற்றுக்கொண்டாரா?'

முதன்முதலில் சந்தித்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஃபீல்ட்கிரோவும் கெர்ஷ்னரும் 2018 செப்டம்பரில் தாங்கள் முதன்முதலில் உடலுறவு கொண்டதாகக் காவல்துறையிடம் ஒப்புக்கொண்டனர்.

Vinvizhi Leninton

தன்னுடைய பதின்பருவத்தில் தன் சொந்தத் தந்தையையே முறையற்ற உறவில் திருமணம் செய்துகொண்ட 28 வயதுப் பெண். பல ஆண்டுகளாக தந்தையை சந்திக்காமலேயே இருந்த நிலையில், இறுதியாக ஒரு புதிய துணையுடன் தன் வாழ்க்கையை வாழத்தொடங்கியுள்ளார்.

சமந்தா கெர்ஷ்னர் தனது 17 வயதில் தன் சொந்தத் தந்தையைச் சந்தித்தார். மூன்று ஆண்டுகளாக, அவருக்கும் அவரது தந்தை டிராவிஸ் ஃபீல்ட்கிரோவிற்கும் இடையே ஒரு சாதாரண தந்தை-மகள் உறவுதான் இருந்து வந்துள்ளது. ஆனால் 2018-ல் அந்த உறவு பாலியல் ரீதியாக மாறியது. பின்பு ஒரு மாதம் கழித்து, அந்த ஜோடி திருமணம் செய்துகொண்டு, அந்தச் செய்தியை முகநூலில் பெருமையுடன் அறிவித்தும் உள்ளனர். இதனையடுத்து கெர்ஷ்னரின் தாயார் அளித்த தகவலின் பேரில், காவல்துறை அந்த முறையற்ற உறவு குறித்து உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். 47 வயதான ஃபீல்ட்கிரோவ், தன் மகளுடன் முறையற்ற உறவில் ஈடுபட முயன்ற குற்றச்சாட்டை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். மேலும் 2020 ஜனவரியில் அந்தக் குற்றத்திற்காக உடனடியாகச் சிறையிலும் அவர் அடைக்கப்பட்டார். இருப்பினும், ஃபீல்ட்கிரோவின் குற்றப் பயணம் அத்துடன் முடிந்துவிடவில்லை. மாநில சீர்திருத்தத் துறை பதிவுகளின்படி, பயங்கரவாத அச்சுறுத்தல்களை விடுத்த குற்றத்திற்காக, 2025 நவம்பரில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தனது தந்தை பல ஆண்டுகளாக சிறையில் இருந்ததைத் தொடர்ந்து கெர்ஷ்னர் தனது புதிய துணைவருடன் சமீபத்தில் நிச்சியதார்தத்தை செய்துகொண்டார். மேலும், கெர்ஷ்னர் தான் "மிகவும் நன்றாக" இருப்பதாகக் கூறினார். இருப்பினும், தனது தந்தையின் சமீபத்திய குற்றத்தீர்ப்புகள் குறித்து அவருக்குத் தெரியாது என்றும், மேலும் கருத்து தெரிவிக்கவும் அவர் மறுத்துவிட்டார்.கெர்ஷ்னருக்கு இப்போது ஒரு புதிய வருங்காலக் கணவரும் ஒரு மகளும் உள்ளனர். மேலும் அவர் அடுத்த ஆண்டு தன் வருங்கால கணவரை திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன. தற்போது, அவர் தனது ஃபீல்ட்கிரோவ் குடும்பத்தினர் அனைவரிடமிருந்தும் தன்னை விலக்கிக் கொண்டுள்ளார். மேலும் கிடைத்த ஆதாரங்களின்படி, அவளுடைய தந்தை ஃபீல்ட்கிரோவுக்கு 1990-களின் நடுப்பகுதியிலிருந்தே குற்றப் பின்னணி உள்ளது என்றும், அவர் அன்று முதல் சிறைக்கு வெளியேதான் இருந்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், அவரது குற்றப் பதிவேட்டில் போலி ஆவணம் தயாரித்தல், திருட்டு, கடைகளில் திருடுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், குடும்ப வன்முறை மற்றும் நன்னடத்தை விதிகளை மீறுதல் போன்ற குற்றங்கள் அடங்கியுள்ளன.

கவலையளிக்கும் விதமாக, 15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதைத் தொடர்ந்து, 1999 ஜனவரியில் ஃபீல்ட்கிரோவ் மீது பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது என நீதிமன்ற ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன. குழந்தை துஷ்பிரயோக வழக்கு நடந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கெர்ஷ்னர் தனது உயிரியல் தந்தையைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தைத் தன் தாயிடம் வெளிப்படுத்தியுள்ளார். அவரும் தண்டனை பெற்ற அவரது குழந்தை பாலியல் குற்றவாளியான தந்தையும் முதன்முறையாகச் சந்தித்தனர். அவர்கள் முதன்முதலில் சந்தித்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஃபீல்ட்கிரோவும் கெர்ஷ்னரும் 2018 செப்டம்பரில் தாங்கள் முதன்முதலில் உடலுறவு கொண்டதாகக் காவல்துறையிடம் ஒப்புக்கொண்டனர். ஆனால் அது எப்படி நிகழ்ந்தது என்ற விவரங்களைப் பற்றி அவர்கள் பேசவில்லை.அதிர்ச்சியளிக்கும் வகையில், தங்கள் தந்தையுடன் யார் முதலில் உடலுறவு கொள்வது என்பது குறித்து தனது ஒன்றுவிட்ட சகோதரியுடன் தனக்கு ஒரு "பொறாமைப் போட்டி" இருந்ததாக அந்த இளம் பெண் காவல்துறையிடம் வெளிப்படுத்தியதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கெர்ஷ்னரின் தாய், தன் மகளுக்கும் அவளது தந்தைக்கும் இடையே இருந்த முறையற்ற உறவு குறித்து காவல்துறைக்குத் தெரிவித்தார். முறையற்ற உறவு குறித்து தாங்கள் விசாரிக்கப்படுவதை அறிந்த அடுத்த மாதமே, அந்த ஜோடிக்குத் திருமணம் நடந்தது. குற்றத்தை மறுக்காமல் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஃபீல்ட்கிரோவுக்கு 2020 ஜனவரியில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், சில மாதங்களுக்கு முன்பே கெர்ஷ்னர் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தின்படி, அவர் குற்றத்தை மறுக்காமல் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர் மீதான முறையற்ற உறவுக் குற்றச்சாட்டு, சிறு குற்றமான தவறான தகவல் அளித்ததாகக் குறைக்கப்பட்டது.

தற்போது, ​​கெர்ஷ்னர் தனது தந்தை தன்னை மூளைச்சலவை செய்ததை ஒப்புக்கொள்கிறார். மேலும், தான் ஒரு பதின்பருவத்தினராக இருந்தபோது அவர் தன்னை 'பயன்படுத்திக் கொண்டார்' என்றும் கூறுகிறார். சமூக ஊடகங்களில் 'அருமையான மனிதர்' என்றும், தன்னையும் தனது இளம் மகளையும் 'வியக்கத்தக்க' முறையில் நடத்துபவர் என்றும் வர்ணிக்கும் தனது தற்போதைய துணைவரைத் திருமணம் செய்துகொள்ள அவர் இப்போது ஆவலுடன் காத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.