“மாற்றுத்திறனாளிக்கு நடந்த திருமண மோசடி” - 10 நாட்களில் தலைமறைவான புதுமணப்பெண்.. இரவோடு இரவாக சென்றது ஏன்?

வீட்டில் இருந்த நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து மர்மமான முறையில் மாயமானார்...
ramalatchumi and two Marriage brokers
ramalatchumi and two Marriage brokers
Published on
Updated on
2 min read

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கோதை மங்கலம் பகுதியைச் சேர்ந்த நேரு என்பவரது மகன் 29 வயதுடைய பாலகிருஷ்ணன். இவர் வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத மாற்றுத்திறனாளி என்பதில் வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். எனவே பாலகிருஷ்ணனை அவரது தாய், தனத்தை குழி வேலை செய்து காப்பாற்றி வந்திருக்கின்றனர். இந்த நிலையில் அவருக்கு திருமணம் செய்ய வரன் தேடப்பட்டு வந்தது. அப்போது, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த புரோக்கர்கள் கிருஷ்ணவேணி (57), சித்ரா (36) மற்றும் மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஜோசப் (62) ஆகியோர் நேருவிற்கு அறிமுகமாகியுள்ளனர்.

இவர்கள் மூலம் சாத்தூர் படந்தால் கிராமத்தைச் சேர்ந்த 226 வயதுடைய ராமலட்சுமி என்ற பெண்ணை, கடந்த 2025 டிசம்பர் மாதம் பாலகிருஷ்ணனுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பெண் பார்த்து கொடுத்ததற்காக புரோக்கர் கமிஷனாக பாலகிருஷ்ணன் தரப்பிடம் இருந்து 2.5 லட்சம் ரூபாயை மூன்று புரோக்கர்களும் பெற்றுள்ளனர். மேலும், திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு 10 கிராம் தங்க நகையையும் பாலகிருஷ்ணன் பெற்றோர் போட்டதாக சொல்லப்படுகிறது.

Admin

இந்நிலையில் திருமணமாகி பாலகிருஷ்ணனுடன் பத்து நாட்கள் குடும்பம் நடத்திய புதுமணப்பெண் ராமலட்சுமி, சரியாக பத்து நாட்கள் முடிந்த நிலையில் வீட்டில் இருந்த நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து மர்மமான முறையில் மாயமானார். எனவே ராமலட்சுமி குறித்து விசாரிக்க மூன்று புரோக்கர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்ட பொது அவர்களும் தலைமறைவானது தெரிய வந்துள்ளது. பின்னர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் இது குறித்து கடந்த ஜனவரி மாதம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், தலைமறைவாக இருந்த போலி மணப்பெண் ராமலட்சுமி மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த புரோக்கர்கள் கிருஷ்ணவேணி, சித்ரா, ஜோசப் ஆகிய 4 பேரையும் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொண்டு பெண் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com