க்ரைம்

“பணியிடை நீக்கம் செய்தும் திருந்தாத தலைமை ஆசிரியர்” - மாணவிக்கு பாலியல் சீண்டல்.. குடிபோதையில் பள்ளிக்கு வந்து அட்ராசிட்டி!

முருகேசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது பொதுமக்கள் சிலர் போட்டோ..

Mahalakshmi Somasundaram

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவரும் நிலையில், பாரத் அம்பேத்கார் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு குடி போதையில் வந்த தலைமை ஆசிரியர் ஐந்தாம் வகுப்பு மாணவியை தன் மடியில் உட்கார வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனை பார்த்த கிராம மக்கள் வீடியோ காட்சி பதிவு செய்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு புகார் அனுப்பி உள்ளனர். புகாரின் பேரில் மாதனூர் வட்டார கல்வி அலுவலர்கள் பீட்டர் மற்றும் முருகேசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது பொதுமக்கள் சிலர் போட்டோ மற்றும் வீடியோ காட்சிகள் பதிவு செய்து இருந்தனர். இதனை அறிந்த வட்டார கல்வி அலுவலர்கள் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்கள் தங்களுடைய செல்போன்களில் பதிவு செய்திருந்த போட்டோ மற்றும் வீடியோக்களை அழித்ததாக கூறப்படுகிறது.

வட்டார கல்வி அலுவலர்கள் கூறியதாவது:-

இவர் ஏற்கனவே பேரணாம்பட்டு ஒன்றியம் அரவட்லா, மாதனூர் ஒன்றியம் காட்டு வெங்கடாபுரம், சம்பந்தி குப்பம் அருகே பள்ளவள்ளி, வெங்கடாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் பணிபுரிந்த நேரத்தில் இதே போன்ற தவறு செய்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக மீண்டும் பணி அமர்த்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் தவறு செய்து இருக்கிறார். ஆகையால் இவரை இப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து நிறுத்தி இவருக்கு பதிலாக வேறு தலைமையாசிரியர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார் . அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அலுவலரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்:

மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் புனிதமான ஆசிரியர் பணியில் உயர் பொறுப்பில் இருந்து கொண்டு ஒரு ஆசிரியர் இவ்வாறு செய்வது மிகவும் கண்டிக்கத்தக்க செயல், பலமுறை தனது பதவியை தவறாக பயன்படுத்திய தலைமை ஆசிரியரை இன்னும் ஆசிரியர் பணியிலிருந்து பள்ளி கல்வித்துறை நீக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.