
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி வீதியில் உள்ள இந்தியன் வங்கி அருகே ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருபவர்கள் சக்கரகுளம் தெருவைச் சேர்ந்த செந்தில் மற்றும் நம்பி நாயுடு தெருவைச் சேர்ந்த திமுக ஆதரவாளர் பொன்ராஜ் இருவருக்கும் தங்களது ஆட்டோவில் சவாரி ஏற்றுவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு சவாரி ஏற்றுவதை தாண்டி தனிப்பட்ட பிரச்சனையாக மாறி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இருவருக்கும் முன்பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று செந்தில் என்பவர் பொன்ராஜ் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகராறு செய்துவிட்டு செந்தில் தனது வீட்டிற்கு சென்ற நிலையில், ஆட்டோ ஸ்டாண்ட் செல்வதற்காக கற்பக விநாயகர் கோவில் சாலையில் நடந்து வந்த செந்திலை அதே சாலையில் ஆட்டோ ஓட்டி வந்த திமுகவின் ஆதரவாளரான பொன்ராஜ் பார்த்து அதிரமடைந்துள்ளார் பின்னர் தான் ஓட்டி வந்த ஆட்டோவை அதிவேகமாக இயக்கி செந்தில் மீது பலமாக மோதியதில் செந்தில் தூக்கி வீசப்பட்டு பின் தலையில் அடிபட்டு கீழே விழுந்து சுயநினைவின்றி கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அருகே இருந்தவர்கள் பொன்ராஜை சத்தம் போட்டு அதே ஆட்டோவில் செந்திலை தூக்கிக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்த நிலையில் செந்திலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே செந்தில் இறந்துவிட்டதாக தெரிவித்த நிலையில் செந்திலின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக பினவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த நகர் காவல் துறையினர் பொன்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்ராஜ் செந்தில் மீது ஆட்டோ ஏற்றி கொலை செய்ததற்கு சவாரி ஏற்றுதலில் ஏற்பட்ட பிரச்சனை தான் காரணமா அல்லது வேறு ஏதாவது முன் பகை காரணமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மற்றொரு ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுநர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.