பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் இளம்பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக விடுதிக்கு அழைத்துச் சென்று தாக்கியதுடன், பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த (செப் 27) ஆம் தேதி காலை, ஜீவிக என்ற மகளிர் குழுவில் பணியாற்றும் இளம்பெண் ஒருவர் கடன் தொகையை வசூலிக்க வீட்டில் இருந்து வெளியே வந்திருக்கிறார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த விக்ரம் குமார் என்ற வாலிபர் இளம் பெண்ணை வழிமறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. பின்னர், அவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி பெகுசராய் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள “புளு டைமண்ட்” என்ற விடுதிக்கு அழைத்துச் சென்ற அந்த நபர், அங்கு இருந்த மற்றொரு வாலிபரான ரோஹித் சர்மாவிடம் பெண்ணை ஒப்படைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி உள்ளார்.
பின்னர் ரோஹித் சர்மா கதவை மூடி பெண்ணை தாக்கி அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. மேலும் முழு சம்பவத்தை வீடியோவாக எடுத்த வாலிபர் அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இளம்பெண் “என்னை விடுடா.. ப்ளீஸ்” என கதறும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதற்கிடையில் ரோஹித் சர்மாவிடம் இருந்து தப்பி விடுதியின் மற்றொரு அறைக்கு சென்ற பெண் ரகசியமாக பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து விடுதிக்கு சென்ற இளம் பெண்ணின் பெற்றோர் அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கின்றனர். வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, போலீசாரின் கவனத்திற்கு இந்த விவகாரம் சென்றுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவரது புகாரின் அடிப்படையில் செப்டம்பர் 28ஆம் தேதி இரவு பெகுசராய் டவுன் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரோஹித் சர்மா மாற்று வினோத் குமாரை தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார் கண்டுபிடித்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இளம் பெண் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் மற்றும் அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி உள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்