கோவா மாநிலம், குர்சோராம் நகராட்சியின் பாஜக கவுன்சிலர் மகன் 20 வயதுடைய சோம் சுஷாந்த் நாயக். இவர் கடந்த மூன்று வருடங்களாக 18 வயதிற்கு கீழ் உள்ள 30 க்கு மேற்பட்ட சிறுமிகளிடம் பழகி அவர்களை ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்திருக்கிறார். மேலும் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்வதை மறைமுக கேமராக்கள் வைத்து வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களிடம் மீண்டும் மீண்டும் வீடியோவை காட்டி அச்சுறுத்தி அவர்களை தனது ஆசைக்கு பலியாகியுள்ளார்.
இந்நிலையில் அந்த வீடியோக்கள் சட்டவிரோத தளங்களில் பதிவிடப்பட்டு வைரலான நிலையில் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு அவருகிறது. ஆந்த வீடியோக்கள் பார்த்து அப்பகுதியில் உள்ள பல்வேறு சிறுமிகள் சுஷாந்த் நாயக் மூலம் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெருக்களில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து சுஷாந்த் நாயக் மீது காவல்துறையினர் தானாகவே வந்து முதல் குற்ற அறிக்கை பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும் போலீசார் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இவர்களுக்கு ஆதரவாக எதிர் கட்சியினரான காங்கிரஸ் மாநில தலைவர் அமித் பட்கர் உடனடியாக இது குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். எனவே சுஷாந்த் நாயக் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் அப்பகுதியில் உள்ள சிறுமிகளின் 25 முதல் 30 பேரை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சுஷாந்த் நாயக்கின் போனை கைப்பற்றிய போலீசார் அதில் இருந்த சிறுமிகளின் வீடியோக்களை டெலிட் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
சுஷாந்த் நாயக் மீது போக்சோ சட்டத்தின் பிரிவுகள் 8, 12, மற்றும் 15(2) மற்றும் கோவா குழந்தைகள் நலச் சட்டத்தின் பிரிவு 8(2) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேலும் கிடைக்கும் ஆதாரங்களுக்கு ஏற்ப வழக்குகள் பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் கவுன்சிலரின் 20 வயது மகன் 30 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.