க்ரைம்

“காதலை மறுத்ததால் பறிக்கப்பட்ட சிறுமியின் உயிர்” - கழுத்தறுத்து புதரில் வீசப்பட்ட மாணவி.. ரயில் முன் பாய்ந்து காதலனும் தற்கொலை!

தீப்தியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போலீசாரிடம்..

Mahalakshmi Somasundaram

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம் துர்காடா கிராமத்தை சேர்ந்தவர் 17 வயதுடைய தீப்தி என்ற பெண். இவர் அதே பகுதியில் உள்ள அசோக் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். தீப்தி தனது சித்தப்பா வீட்டில் தங்கி படித்து வந்ததாக சொல்லப்படுகிறது. தீப்தி காதலிப்பதை அறிந்த அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.

எனவே தீப்தியும் அசோக்குடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும் அசோக் தொடர்ந்து தீப்தியை தொல்லை செய்து வந்துள்ளார் இந்நிலையில் தீப்தியின் தோழி அவரது சித்தப்பா வீட்டில் அனைவரும் வெளியில் சென்றிருந்த நிலையில் தீப்தியை வெளியில் அழைத்து வந்துள்ளார். அப்போது அங்கு தீப்தியை பார்த்த அசோக் குமார் அவரிடம் சமாதானம் பேசி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து விட்டு கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்த அசோக் காதலியை கொன்று விட்ட மனவேதனையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். தீப்தியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போலீசாரிடம் புகாரளித்த நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர் அப்போது துர்காடா அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில இருந்து தீப்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து கொலையா? இல்லை தற்கொலை? என விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது போலீசாருக்கு போன் செய்த ஒருவர் ரயில் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற தகவலை தெரிவித்துள்ளார். பின்னர் ரயில் நிலையத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்த அசோக்கின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்ததில் தீப்தியும் அசோக்கும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அசோக் தனது காதலை மறுத்ததால் தீப்தியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. காதலியை கழுத்தறுத்து கொன்று விட்டு காதலன் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.