தெலுங்கானா மாநிலம், பெளகாவி மாவட்டம் கானாபூர் பகுதியை சேர்ந்தவர் 46 வயதுடைய பர்வதம்மா. இவருக்கும் சந்திரப்பா என்பவருடன் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில் பர்வதம்மாவிற்கு அதே பகுதியை சேர்ந்த ராமலு என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் இருந்து வந்திருக்கின்றனர். இதனை அறிந்து சந்திரப்பா இருவரையும் கண்டித்த நிலையில் பர்வதம்மா அவரது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கடந்த 2016 ஆம் ஆண்டு கழுத்தை நெரித்து கொலை செய்தார். எனவே இந்த அவ்வழக்கில் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த இருவருக்கும் இடையே மீண்டும் பழக்கம் ஏற்பட்டு பேசி வந்த நிலையில் அதே கிராமத்தில் தனியாக வீடு எடுத்து கணவன் மனைவி போல வாழ்ந்து வந்திருக்கின்றனர். அப்போது ராமலுவிற்கு மீண்டும் லட்சுமி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடனும் திருமணத்திற்கு புறம்பான உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பர்வதம்மா ராமலுவை கண்டித்த நிலையில் லட்சுமியை கடுமையாக திட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் ராமலு தொடர்ந்து லட்சுமியுடன் பழகி வந்திருக்கிறார்.
எனவே பர்வதம்மா ராமலு பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி எழுதி தர வேண்டும் என்றும் லட்சுமியுடனான உறவை முறித்துக் கொண்டு தன்னுடன் நிரந்தரமாக வாழ வேண்டும் என்றும் ராமலுவை தொந்தரவு செய்து வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ராமலு தனது இரண்டாவது கள்ளக்காதலி லட்சுமியுடன் சேர்ந்து பர்வதம்மாளை கொலை செய்ய திட்டம் திட்டியிருக்கிறார். அதன்படி வழக்கம் போல பர்வதம்மாவை மது அருந்த வயலுக்கு அழைத்து சென்ற ராமலு அவருக்கு மது கொடுத்து போதை தலைகேறியதும் லட்சுமியுடன் சேர்ந்து கட்டையால் அடித்து கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்திருக்கிறார்.
பின்னர் பர்வதம்மாவின் உடலில் இருந்த நகைகளை எடுத்த இருவரும் சேர்ந்து கொலையை மறைக்க நினைத்து அருகில் இருந்த வயலில் மக்காச்சோளம் கழிவுகளுடன் சேர்த்து உடலை தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கின்றனர். நிலத்தில் பாதி எறிந்த நிலையில் இருந்த சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயி இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் பர்வதம்மாவின் மகன் தனது தயை காணவில்லை என புகைரளித நிலையில் வயலில் இருந்த சடலம் பர்வதம்மா என்பது அடையாளம் காணப்பட்டது.
தொடர்ந்து பர்வதம்மாவின் மகன் கொடுத்த தகவலின் படி ராமலுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து பர்வதம்மாவை கொன்று எரித்ததை ஒப்புக்கொண்டார். எனவே இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தி ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 10 வருடங்களுக்கு கள்ளக்காதல் விவகாரத்தில் பிறகு கணவன் கொல்லப்பட்டது போன்றே மனைவியும் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.