க்ரைம்

“மகனின் நண்பருடன் தொடர்பில் இருந்த தாய்” - ஸ்கெட்ச் போட்டு காத்திருந்த வாலிபர்.. காதலனை கொன்று ஏரியில் மிதக்க விட்ட பயங்கரம்!

கொலை வழக்கில் சிறைக்கு சென்ற கார்த்திக் சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே...

Mahalakshmi Somasundaram

சென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் 21 வயதுடைய கார்த்திக். இவர் அதே பகுதியில் பெயிண்டர் வேலை பார்த்து வந்த நிலையில் இவர் மீது சுற்றுவட்டார காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. கார்த்திக்குக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய விக்னேஷ் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் கார்த்திக் விக்னேஷை சந்திக்க அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

அப்போது விக்னேஷின் தாய் கார்த்திக்குடன் மகனின் நண்பன் என்ற காரணத்தால் பேசி பழகி வந்துள்ளார் ஆனால் இந்த பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி கார்த்திக் அடிக்கடி விக்னேஷின் தாயுடன் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த விக்னேஷ் தனது நண்பனே இப்படி செய்து விட்டானே என மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார். எனவே கார்த்திக்கை கொலை செய்ய திட்டமிட்டு சரியான நேரத்திற்காக காத்திருந்துள்ளார். இருப்பினும் இதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல் கார்த்திக்குடன் வழக்கமாக பழகி வந்துள்ளார்.

பலமுறை கார்த்திக்கை விக்னேஷ் கொலை செய்ய முயற்சித்தும் ஒவ்வொரு முறையும் விக்னேஷ் போட்ட திட்டத்தில் இருந்து கார்த்திக் தப்பித்துக் கொண்டே இருந்துள்ளார். இந்நிலையில் ஒரு கொலை வழக்கில் சிறைக்கு சென்ற கார்த்திக் சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பின்னர் விக்னேஷின் வீட்டிற்கு வந்து அவரது தாயை சந்தித்தாக சொல்லப்படுகிறது. இதனால் மிகுந்த ஆத்திரம் அடைந்த விக்னேஷ் அன்று இரவு கார்த்திக்கை மது அருந்த அழைத்துள்ளார்.

பின்னர் கார்த்திக், விக்னேஷ் மற்றும் அவர்களுடன் சில நண்பர்கள் மது அருந்த சென்று ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது விக்னேஷ் மற்ற நண்பர்களை கடைக்கு அனுப்பி வைத்துவிட்டு கார்த்திக்கை அடித்து கொலை செய்து சடலத்தை சிறிது தொலைவில் உள்ள ரெட்டேரி ஏரியில் வீசியுள்ளார். மீண்டும் வந்த நண்பர்கள் கார்த்திக்கை காணவில்லை என கேட்டபோது அவன் வீட்டிற்கு சென்று விட்டான் என கூறிவிட்டு விக்னேஷும் வீட்டிற்கு சென்றுள்ளார். காலையில் கார்த்திக்கின் சடலத்தை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது விக்னேஷ் தனது தாயுடன் கார்த்திக் தகாத உறவில் இருந்ததால் அவரை கொலை செய்துவிட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து விக்னேஷை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.