க்ரைம்

“மனைவியை வெட்டி கொன்ற இரண்டாவது கணவர்” - வடமாநில பெண்ணுக்கு சென்னையில் நடந்த கொடூரம்.. தாயை பார்த்து அலறிய பிள்ளைகள்!

கருத்து வேறுபாடு காரணமாக சுனில் சஞ்சாவை விட்டு பிரிந்து சென்ற நிலையில் சஞ்சா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்

Mahalakshmi Somasundaram

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தவர் சஞ்சா. நேபாளம் பகுதியை சேர்ந்த இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சுனில் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. சுனில் மற்றும் சஞ்சா தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள நிலையில் குடும்பமாக டெல்லியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக சுனில் சஞ்சாவை விட்டு பிரிந்து சென்ற நிலையில் சஞ்சா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். 

அப்போது சஞ்சாவிற்கு தன்னுடன் வேலை பார்க்கும் சன்பகோர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கமானது காதலாக மாறி சன்போகர்  மற்றும் சஞ்சா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அனைவருக்கும் சஞ்சா இரண்டாவது திருமணம் செய்து கொண்டது தெரிந்து தவறாக பேசி வந்த நிலையில் சஞ்சா, சன்போகர் மற்றும் அவரது குழந்தைகளுடன் சென்னை வந்துள்ளார். பின்னர் கோட்டூர்புரத்தில் சன்போகர், சஞ்சா மற்றும் சஞ்சா குழந்தைகளுடன் சேர்ந்து குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். 

சன்போகர் சஞ்சாவின் குழந்தைகளை தான் பெற்ற பிள்ளைகள் போல நன்றாக பார்த்து வந்துள்ளார். சென்னை வந்த பிறகு சஞ்சா மற்றும் சன்போகர் இருவரும் ஒரே தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளனர். திருமணமான தொடக்கத்தில் சஞ்சாவை அதிகமாக வெளியில் கூட்டி சென்று நேர செலவிட்ட சன்போகர் காலபோக்கில் சஞ்சாவிடம் பேசுவதை குறைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும் வேலையை விட்டு வீட்டுக்கு வந்த பிறகும் சன்போகர் தொடர்ந்து யாரிடமோ போனில் பேசி வந்துள்ளார் இதனால் சஞ்சா மற்றும் சன்போகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

பலமுறை சன்போகர் தனது நண்பர்களிடம் தான் பேசுகிறேன் என கூறியும் சஞ்சா அதை நம்பாமல் தொடர்ந்து சன்போகரை சந்தேகப்பட்டு வாக்குவாதம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சன்போகர் வேலையை முடித்துவிட்டு வீட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவருக்கு போன் கால் வந்ததால் மீண்டும் சஞ்சா சன்போகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சன்போகர் வீட்டில் இருந்த அரிவாள் மனையை எடுத்து சஞ்சாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதை பார்த்து குழந்தைகளை சத்தமிட்டு நிலையில் அவ்விடத்தை விட்டு சன்போகர் தப்பி சென்றுள்ளார். 

குழந்தைகளின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த சஞ்சா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த சன் போகரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மனைவியை கணவனே வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.