சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த 24 வயதான அப்பு, அதே பகுதியை சேர்ந்த கோகுல்(25), ஜெகதீஷ்(25), அஜெய் (எ) கலர் புவநேஷ்20), ரமேஷ் (எ) பவர் ரமேஷ்(28) மற்றும் வேளச்சேரி பகுதியை சேர்ந்த ஜீவா (எ) ஜீவரத்தினம்(26) ஆகியோர் நேற்று மாலை முதல் மது அருந்தியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை அப்பு மனைவியை வேளையில் இருந்து அழைத்து வர ஜீவரத்தினம் அப்புவின் செல்போன் எடுத்துக் கொண்டு, பைக்கில் சென்றுள்ளார்.
அப்பொழுது அப்புவின் மனைவி கணவர் அப்பு வராமல் ஜீவரத்தினம் சென்றதால் கடும் கோபத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது.
நண்பர்கள் அனைவரும் மது அருந்திவிட்டு அவர் அவர் வீடு திரும்பினார்.
அப்பு மனைவியிடம் ஜீவரத்தினம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அப்பு அவரது நண்பர்களுடன் சேர்ந்து ஜீவரத்தினத்திற்கு செல்போனில் தொடர்பு கொண்டு RCB வெற்றியை கொண்டாடும் வகையில் மது அருந்தலாம் என கூறி அழைத்துள்ளனர்.
மனைவியிடம் தவறாக நடந்து கொண்டதால் ஜீவரத்தினத்தை RCB வெற்றியை கொண்டாடுவதாக கூறி நள்ளிரவு 12 மணிக்கு பெருங்குடி கல்லுக்குட்டைக்கு வரவைத்து கண்மூடித்தனமாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஜீவா (எ) ஜீவரத்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்த துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீசார் ஜீவரத்தினத்தை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட அப்பு, கோகுல், ஜெகதீஷ், அஜெய் (எ) கலர் புவநேஷ், ரமேஷ் (எ) பவர் ரமேஷ் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்