நேற்று நடந்த RCB-க்கு எதிரான போட்டியின் பேசுபொருளாக உருவெடுத்திருப்பது, தோனி அஸ்வினுக்கு பிறகு பேட்டிங்குக்கு வந்தது, final over-ல ரெண்டு சிக்ஸரு அடிச்சு crowd-ஐ "vibe" பண்ண வெச்சது. இது CSK மேனேஜ்மென்டோட சரியான அணுகுமுறையா? தோனி இன்னும் CSK-ல விளையாடுறது ஜெயிக்கிறதுக்காகவா, இல்ல branding-க்காகவா? Ticket demand தோனி இருக்குறதால உச்சத்துல இருக்கு - இது ஓகே. ஆனா அஸ்வினுக்கு பிறகு தோனி எப்படி வர்றார்? இதுல என்ன intention இருக்கு? சென்னை எப்பவும் "knowledgeable crowd"னு பேர் வாங்குனது, ஆனா இப்போ stadium-க்கு வர்றவங்க cricket fans இல்ல, "vibe" பண்ண வந்த crowd-ஆ மாறியிருக்காங்க. தோனியோட சிக்ஸர்ஸ் இதுக்கு ஒரு tool-ஆ மாறி, சென்னையோட legacy-ய இழிவுபடுத்துற மாதிரி ஆகியிருக்கு.
ஒரு Controversy-யோட ஆரம்பம்
நேத்து மேட்ச் ஒரு blockbuster clash-ஆ தொடங்குச்சு. RCB 196/7 ஸ்கோர் பண்ணி, CSK-க்கு ஒரு கடினமான target கொடுத்தாங்க. ஆனா CSK chase பண்ணும் போது, 13 ஓவர் முடியறதுக்குள்ள 80/6-னு சரிஞ்சு போயிருந்தாங்க. Run rate ஏறிக்கிட்டே போக, fans-ஓட expectation தோனி வந்து game-ஐ turn பண்ணுவாருனு இருந்துச்சு. ஆனா, CSK மேனேஜ்மென்ட் ஒரு shock move கொடுத்துச்சு - Ravichandran Ashwin லோக்கல் பையன் தோனிக்கு முன்னாடி பேட்டிங்குக்கு அனுப்பப்பட்டார். Ashwin 7 பால் ஆடி 3 ரன் எடுத்து அவுட் ஆனார். அப்புறம் தான் தோனி No. 9-ல வந்தார் - ஆனா match ஜெயிக்கல - 50 ரன்னுக்கு தோத்தாங்க.
ஆனா "தோனி ஏன் இவ்ளோ late-ஆ வந்தார்?", "Ashwin-க்கு முன்னாடி அனுப்பலாமே?", "CSK என்ன drama பண்ணுது?"னு இப்போ பெரிய விவாதமே கிளம்பியிருக்கு. X-ல ஒரு user, "CSK fans celebrating Ashwin’s wicket just to see Dhoni bat - இது knowledgeable Chennai crowd-னு சொல்ல முடியுமா?" கேட்டிருக்கார்.
CSK Management-ஓட Strategy - Branding Over Winning?
CSK மேனேஜ்மென்ட் இந்த முடிவு எடுத்ததுக்கு பின்னாடி ஒரு தெளிவான intention இருக்குனு பலர் நம்புறாங்க. தோனி IPL-ல ஒரு brand icon - CSK-யோட face, crowd puller, ticket sales-ஓட backbone. 2025 season-ல தோனி uncapped player-ஆ retain பண்ணப்பட்டதுல இருந்து, அவரோட role winning-ல மட்டும் இல்ல, franchise value-லயும் focus பண்ணுதுனு தெரியுது. X-ல ஒரு post சொல்ற மாதிரி, "Dhoni is playing for CSK just for his brand value, not to make CSK win matches." இது harsh-ஆ தெரிஞ்சாலும், இதுல ஒரு truth இருக்கு.
Ticket Demand & Vibe Culture:
Chepauk-ல tickets high demand-ல இருக்கு - தோனி இருக்குற ஒரே reason-க்காக. CSK vs MI மேட்ச் tickets 10 நிமிஷத்துல sold out ஆகிடுச்சு. ஆனா stadium-ல crowd "vibe" பண்ண வந்தவங்க மேல இருக்கு - cricket பார்க்குற genuine fans குறைஞ்சு, "Dhoni! Dhoni!"னு கத்தி, சிக்ஸர் பார்த்து enjoy பண்ணுறவங்க ஆகிட்டாங்க. Final over-ல தோனி ரெண்டு சிக்ஸர் அடிச்சப்போ crowd ஆரவாரம் பண்ணுச்சு, ஆனா match தோத்ததை பத்தி யாரும் பெருசா worry பண்ணல. இது CSK-யோட commercial strategy-க்கு சாதகமா இருந்தாலும், cricket-ஓட spirit-ஐ கேள்விக்கு உட்படுத்துது.
Irfan Pathan X-ல எழுதுன மாதிரி, "I’ll never be in favour of Dhoni batting at No. 9. Not ideal for team." இது CSK-யோட batting order logic-ஐ கேள்வி கேட்குது. Fans சொல்ற மாதிரி, "தோனிய late-ஆ வந்து சிக்ஸர் அடிச்சு crowd-ஐ உசுப்பேத்துறது intentional-ஆ தெரியுது."
"Knowledgeable Chennai Crowd" - ஒரு Lost Legacy
சென்னை crowd எப்பவும் "knowledgeable"னு பேர் வாங்குனது - cricket-ஓட nuances-ஐ புரிஞ்சு, எல்லா players-ஐயும் appreciate பண்ணுற maturity-க்காக. ஆனா இப்போ அந்த legacy மாறி, "vibe" culture ஆதிக்கம் செலுத்துது. Ambati Rayudu recent-ஆ ESPN-க்கு சொன்ன மாதிரி, "CSK fans are MS Dhoni fans first, not team fans. It’s daunting for other players." நேத்து Ashwin அவுட் ஆனப்போ crowd ஆரவாரம் பண்ணுச்சு - not because of strategy, but because தோனி வருவாருனு. இது local legend Ashwin-க்கே insult-ஆ தெரிஞ்சுது.
Stadium atmosphere இப்போ ஒரு concert vibe-ஐ தாண்டி போகல. தோனி சிக்ஸர் அடிச்சா decibel level 130-ஐ தொடுது/ ஆனா match context பத்தி யாரும் கவலைப்படுறது இல்ல. இது Chennai crowd-ஓட maturity-ய இழிவுபடுத்துற மாதிரி ஆகுது.
Unknowledgeable Crowd-ஓட Rise:
Cricket fans-ஐ விட "vibe" fans ஆதிக்கம் அதிகமாகுது. Tickets வாங்குறவங்க தோனிய பார்க்கவும், stadium-ல selfie எடுத்து post பண்ணவுமே வர்றாங்க. இது CSK-க்கு commercially hit ஆனாலும், சென்னையோட cricketing culture-ஐ dilute பண்ணுது. winning strategy compromise ஆகுது. தோனியோட late entry, match-ஐ ஜெயிக்கிறத விட crowd-ஐ entertain பண்றதுக்கு priority கொடுக்குற மாதிரி தெரியுது. இது long-term-ல CSK-யோட cricketing legacy-ய கெடுக்கலாம்.
நேத்து மேட்ச் ஒரு wake-up call. தோனி No. 9-ல வந்து சிக்ஸர் அடிச்சு crowd-ஐ "vibe" பண்ண வெச்சது CSK-க்கு commercially hit ஆனாலும், cricketing sense-ல ஒரு அவமானம். "Knowledgeable Chennai crowd" பெருமை இப்போ ஊரே கைகொட்டி சிரிக்குற மாதிரி மாறிடுச்சு. CSK மேனேஜ்மென்ட் தோனிய வெச்சு branding பண்றது தப்பு இல்ல, ஆனா winning-ஐ sacrifice பண்ணி, legacy-ய கெடுக்குறது justify பண்ண முடியாது. சென்னை தன்னோட cricketing soul-ஐ திரும்பி பிடிக்கணும் - இல்லனா, பெங்களூரு மட்டுமில்ல, எல்லா டீமும் இங்க வந்து CSK-வை சுளுக்கு எடுப்பது உறுதி.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்