க்ரைம்

“மாணவிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை” - காதலின் பெயரில் வாலிபர் செய்த துரோகம்… நண்பர்கள் மாறி மாறி சீரழித்த கொடூரம்!

தனிமையில் இருந்து வீடியோவை காண்பித்து மிரட்டி வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்...

Mahalakshmi Somasundaram

கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டம் மாகாடி பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் விகாஸ். இவருக்கு அதே கல்லூரியில் படிக்கும் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் நாளடைவில் இருவரும் காதலித்து வந்திருக்கின்றனர். அப்போது மாணவியை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்த விகாஸ் மாணவியை கட்டாயப்படுத்தி தனிமையில் இருந்திருக்கிறார். மேலும் மாணவியுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்த விகாஸ் அதனை அவரது நண்பர்களுக்கு பகிர்ந்திருக்கிறார்.

அந்த வீடியோவை பார்த்த விகாஸின் கல்லூரி நண்பரான பிரஷாந்த் மற்றும் எலெக்ட்ரிஷியன் வேலை பார்க்கும் சேத்தன் ஆகிய இருவரும் மாணவியுடன் தனிமையில் இருக்க நினைத்து இது குறித்து விகாஸ் இடம் தெரிவித்துள்ளனர். எனவே தனது நண்பர்களுடன் சேர்ந்து விகாஸ் அவரது காதலியை கடந்த அக்டோபர் மாதம் சேத்தன் வீட்டிற்கு வரவழைத்து தனிமையில் இருந்து வீடியோவை காண்பித்து மிரட்டி வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.

பின்னர் அதையும் வீடியோவாக எடுத்து வைத்து விகாஸ், சேத்தன் மற்றும் பிரசாந்த் ஆகிய மூவரும் சேர்ந்து அடிக்கடி மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் இவர்களின் டார்ச்சர் தாங்க முடியாத மாணவி இதுகுறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் மூவரின் போனையும் கைப்பற்றிய சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இந்த வீடியோ காபி வேறு யாரிடமாவது இருக்கிறது என்றும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா எனவும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவியை காதலிப்பதாக ஏமாற்றி தனிமையில் இருந்த வீடியோவை வைத்து மிரட்டி மூன்று வாலிபர்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்