“இப்படி ஒரு கஷ்டம் எந்த அம்மாக்கும் வரக்கூடாது” - தாயின் கண்முன்னே துடிதுடித்த மகள்… இரக்கமின்றி அடித்துக்கொன்ற காதல் கணவன்!

ஆத்திரமடைந்த பரமேஷ் அனுஷாவை வீட்டிற்கு வெளியில் இழுத்து சென்று அங்கிருந்த கட்டையால் அவரது தாய் கண் முன்னே...
“இப்படி ஒரு கஷ்டம் எந்த அம்மாக்கும் வரக்கூடாது” - தாயின் கண்முன்னே துடிதுடித்த மகள்… இரக்கமின்றி அடித்துக்கொன்ற காதல் கணவன்!
Published on
Updated on
2 min read

தெலுங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயதுடைய பரமேஷ். இவர் அதே பகுதியில் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய அனுஷா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

திருமணமான மூன்று மாதத்தில் பரமேஷ் தனது காதலி அனுஷாவை அவரது வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வர கூறி கட்டாயப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. எனவே அனுஷா இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அனுஷா வீட்டிற்கு வந்த அவரது தாய் பரமேஷ் மற்றும் அனுஷாவை சமாதானம் செய்து வைத்திருக்கிறார்.

ஆனால் பரமேஷ் அனுஷாவின் தாய் முன்பே அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார். இதனால் மீண்டும் கணவன் மனைவி இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பரமேஷ் அனுஷாவை வீட்டிற்கு வெளியில் இழுத்து சென்று அங்கிருந்த கட்டையால் அவரது தாய் கண் முன்னே சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அனுஷாவை மீட்டு அவரது தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அனுஷாவின் தாய் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலை செய்து விட்டு தப்பித்து சென்ற பரமேஷை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை வரதட்சணை கேட்டு அவரது தாய் கண் முன்னே கணவன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பரமேஷ் அவரது மனைவியை வீட்டுக்கு வெளியில் கட்டையால் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com