க்ரைம்

“தலை நசுங்கி இறந்து கிடந்த மூதாட்டி” - குப்பைகளை சேகரிப்பதில் ஏற்பட்ட தகராறு.. நள்ளிரவில் கல்லை போட்டு கொலை செய்த கோவிந்தராஜ்!

பகல் முழுவதும் குப்பைகளை சேகரித்து விட்டு இரவு நேரத்தில் அதே பகுதியில் படுத்து உறங்குவதை..

Mahalakshmi Somasundaram

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோபாலபுரம் திருவள்ளுவர் சிலை பகுதியில் உள்ள குப்பை மேட்டில் மூதாட்டி ஒருவர் தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாலுகா காவல் நிலைய போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் இறந்து கிடந்த மூதாட்டி கேரள மாநிலம் நெடும் பாறை அடுத்த வண்ணாமடை பகுதியை சேர்ந்த பட்டீஸ்வரி என்பது தெரியவந்துள்ளது. இந்த மூதாட்டி சாலையோரம் உள்ள குப்பைகளில் கிடக்கும் அட்டைப்பெட்டிகள், கண்ணாடி பாட்டில்கள் போன்ற பொருட்களை சேகரித்து அதனை விற்பனை செய்து அதன் மூலம் வரும் பணத்தை வைத்து வாழ்ந்து வந்துள்ளார். மூதாட்டிக்கு என் வீடு எதுவும் இல்லாத நிலையில் பகல் முழுவதும் குப்பைகளை சேகரித்து விட்டு இரவு நேரத்தில் அதே பகுதியில் படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தாகவும் சொல்லப்படுகிறது.

மூதாட்டியின் தலையில் பலத்த காயம் இருந்தால் இவரை யாரவது கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியில் குடும்பத்தை விட்டு வெளியேறிய கேரள மாநிலம் மூங்கில் மடையைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் தனது குடும்பத்தில் இருந்து வெளியேறி குப்பைகளை சேகரித்து வாழ்ந்து வந்துள்ளார். மூதாட்டியும் கோவிந்தராஜன் ஒரே பகுதியில் குப்பைகளை சேகரிப்பதில் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜன் மூதாட்டி இரவு தூங்கிக் கொண்டிருந்த போது கல்லால் அடித்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் கொலை செய்த கோவிந்தராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது அவரை கைது செய்த தாலுகா காவல் நிலைய போலீசார் மூதாட்டியை கொலை செய்ததற்கு வேறு காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குப்பைகளை சேகரித்து வாழ்ந்து வந்த மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.