கடலூர் மாவட்டம் பண்ருட்டி திரசு பகுதியை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி தனலட்சுமி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அதே பகுதியில் உள்ள புலவனுர் சாலையில் மருத்துவரின் அறிவுரை படி காலை மாலை நடைபயிற்சி செல்வது வழக்கம். அதே போல் இன்று காலையும் மூதாட்டி நடைப்பயிற்சி சென்றுள்ளார்.
அப்போது அங்கு அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த சுந்திரவேல் என்ற இளைஞர் மூதாட்டியை வழிமறித்து வேண்டுமென்றே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின்னர் மூதாட்டியை வலுக்கட்டாயமாக சவுக்குத் தோப்புக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மூதாட்டியிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். மூதாட்டியின் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு வந்த மக்கள் தனலட்சுமி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உடனடியாக அப்பகுதி மக்கள் இதனை போலீசில் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் ஆதாரங்களை சேகரித்து தப்பி சென்ற சுந்திரவேலை தனிப்படை அமைத்து தேடி வந்துள்ளனர். அப்போது காடாம்புலியூர் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. காடாம்புலியூர் பகுதிக்கு சென்ற போலீசார் சுந்திரவேலை பிடிக்கும் போது அவர் போலீசாரை தாக்கி தப்பிக்க முயற்சித்துள்ளார்.
அப்போது சுந்திரவேலை பிடிப்பதற்கு போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அவரின் காலில் சுட்டு பிடித்துள்ளனர்.சுந்தரவேல் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மேலும் இதில் காயம் அடைந்த போலீசாரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.