Arogya Das 
க்ரைம்

“ஆசிரியர் வீட்டிற்கு படிக்க வந்த சிறுமி” - மனைவி இல்லாத போது வெளிப்பட்ட கோர முகம்.. பிள்ளையை பரிசோதித்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஈஸ்டர் பண்டிகையின் போது ஆரோக்கியதாஸ் வீட்டிலேயே 6 நாட்கள் தங்கி படித்துள்ளார்

Mahalakshmi Somasundaram

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ், 47 வயதாகும் இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில்  வேலையை விட்டுவிட்டு 4 ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார்.இவரது  மனைவி அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அரசு குடியிருப்பு பகுதியில் இருக்கும் இவர்களது வீட்டிற்கு ஆரோக்கியதாஸ் மனைவியின் பள்ளியில் படித்து வந்த உறவினர் மகளான 10 வகுப்பு சிறுமி,  அவ்வப்போது ஆரோக்கியதாஸ் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.  ஈஸ்டர் பண்டிகையின் போது ஆரோக்கியதாஸ் வீட்டிலேயே 6 நாட்கள் தங்கி படித்துள்ளார். அப்போது வீட்டில் தனது மனைவி இல்லாத போது உறவினர் மகளிடம்  ஆரோக்கியதாஸ் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளார்.

இதனால் சில நாட்கள் கழித்து அந்த சிறுமியின் உடல் சோர்வடைந்து. உடலில் மாற்றங்களும் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் உடல் நிலையை கவனித்த பெற்றோர்கள் சிறுமியிடம் என்ன நடந்தது என கேட்டுள்ளனர். பிறகு சிறுமி ஆரோக்கியதாஸ் வீட்டில் நடந்ததை தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

womans police station

எனவே சந்தேகமடைந்த தாய் அச்சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில், மருத்துவர்கள் அச்சிறுமி கர்ப்பமாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர்  இதுகுறித்து சிறுமியின் அனைத்து மகளிர் காவல் துறையில் புகாரளித்துள்ளார். 

இதனை  அடுத்து ஆரோக்கியத்தாஸை விசாரணை செய்த மகளிர் காவல் துறையினர். குற்றத்தை உறுதிப்படுத்தியதை அடுத்து, ஆரோக்கியதாஸை போக்ஸோ சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்