க்ரைம்

“அக்கா கணவருடன் கள்ள தொடர்பில் இருந்த தங்கை” - தனிமையில் இருக்கும் போது ஏற்பட்ட தகராறு… உயிருடன் குழி தோண்டி புதைக்கப்பட்ட பெண்!

மேலும் அடிக்கடி வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் வெளியில் சந்தித்து பேசுவதையும்...

Mahalakshmi Somasundaram

தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள ஒச அள்ளி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரியான 40 வயதுடைய அனுமந்தன். இவருக்கும் வரதராஜன் கொட்டாய் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய முனியம்மாள் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே போல முனியம்மாளின் தங்கையான 30 வயதுடைய ராஜேஸ்வரி என்பவருக்கு அதே பகுதியில் உள்ள அனுமந்தனின் தம்பி முறை உறவு கொண்ட பிரபு என்பவருக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அக்கா தங்கை இருவரும் உறவினர்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர் என சொல்லப்படுகிறது. அப்போது ராஜேஸ்வரிக்கும் அக்காவின் கணவரான அனுமந்தனுக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டு அது திருமணத்திற்கு மீறிய உறவாக மீறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்திருக்கின்றனர். மேலும் அடிக்கடி வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் வெளியில் சந்தித்து பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

வழக்கம் போல வெளியில் சந்திக்க முடிவு செய்த அனுமந்தன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரியை தளவாய் அள்ளி கிராம பகுதி ஒட்டி உள்ள கரட்டு பகுதியில் தனிமையில் சந்திக்க வரச் சொல்லி இருக்கிறார். ராஜேஸ்வரியும் தனது இருசக்கர வாகனத்தில் சென்று அக்காவின் கணவர் அனுமந்தனிடம் தனிமையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறிய உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அனுமந்தன் மச்சினிச்சியை அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

இதில் மயங்கி விழுந்த ராஜேஸ்வரியை அருகில் இருந்த பள்ளத்தில் போட்டு கட்டிட பணிக்கு டிராக்டரில் வைத்திருந்த மண்ணை போட்டு உயிருடன் ராஜேஸ்வரியை புதைத்து பள்ளத்தை மூடி விட்டு சென்று விட்டார். அப்போது கரட்டு பகுதி அருகே வயல்வெளியில் வேலை செய்திருந்த ஒரு சிலர் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை பார்த்துள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து அனுமந்தன் மட்டும் டிராக்டரை ஒட்டிக்கொண்டு சென்றதைப் பார்த்துள்ளனர். எனவே சந்தேகமடைந்து உடனடியாக இண்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு வந்து மண்ணைப் போட்டு மூடி இருந்த இடத்தை தோண்டி எடுத்த போது ராஜேஸ்வரி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கிருந்து தப்பிச் சென்ற அனுமந்தனை உடனடியாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்காவின் கணவருடன் கள்ளத் தொடர்பில் இருந்த மச்சினிசியை கல்லைக் கொண்டு தாக்கி உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.