“சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி” - கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் நடந்த கொடூரம்.. தாக்குதலுக்கு காரணம் கள்ளத்தொடர்பா?

நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது...
“சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி” - கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் நடந்த கொடூரம்.. தாக்குதலுக்கு காரணம் கள்ளத்தொடர்பா?
Published on
Updated on
2 min read

சென்னை மாவட்டம், கொளத்தூர் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ரவுடி ஆதி. இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், குறிப்பாக ஒரு கொலை வழக்கில் முக்கிய நபராக இருந்து போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது தோழியான சுசித்ரா என்பவற்றின் குழந்தை கடந்த ஒரு மாத காலமாக உடல்நலக்குறைவு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்துள்ளது.

இதையடுத்து, சுசித்ராவுக்கு ஆறுதல் கூறும் நோக்கில் நேற்று இரவு ரவுடி ஆதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது மருத்துவமனை அலுவலக வளாகம் அருகே மறைந்திருந்த மூன்று மர்ம நபர்கள், ஆதியை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ரவுடி ஆதி, ரத்த வெள்ளத்தில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டிற்குள் ஓடி சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார.

அரசு மருத்துவமனை போன்ற பாதுகாப்பு மிகுந்த இடத்தில், அதுவும் இரவு நேரத்தில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் பல்வேறு கொக்கலில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே நிலுவையில் உள்ள கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் பழிவாங்க கொலை செய்தார்களா? அல்லது முன்னாள் தோழியின் தனிப்பட்ட பிரச்சனையில் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாக? அல்லது வேறு ஏதேனும் முன் விரோதம் காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, சுசித்ராவின் உறவினர்களான சூர்யா, அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகிய மூவர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு, போலீசார் அவர்களை தேடி விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்த ரவுடி ஆதிக்கும் சுசித்ராவிற்கும் கள்ள தொடர்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில் அது போலீசார் விசாரணைக்கு பிறகே உறுதி செய்யப்படும் என தெரியவந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com