lokeswaran and ammu  
க்ரைம்

“சாப்பாட்டில் கலந்து கொடுக்கட்டுமா” - கணவனை கொல்ல நினைத்த மனைவி.. ஆடியோ மூலம் வசமாக சிக்கிய கள்ளக்காதலன்!

மருந்து கலந்த மாதுளம் பழம் ஜூஸ் வேணான்னு சொல்லிட்டான் இப்ப என்ன பண்ணட்டும்

Mahalakshmi Somasundaram

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் 43 வயதான ரசூல். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 35 வயதான அம்முபி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ரசூல் மற்றும் அம்முபி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் ரசூல் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அம்முவிற்கு அதே பகுதியை சேர்ந்த சலூன் கடை வைத்து நடத்தும் 26 வயது லோகேஸ்வரனுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

அவருடன் உறவு வைத்து கொள்ள ரசூல் தடையாக இருக்கிறார். என எண்ணிய அம்முபி தனது கள்ளக்காதலனான லோகேஷ் உடன் சேர்ந்து கொண்டு தனது கணவர் ரசூலை கொலை செய்ய நினைத்து அவருக்கு உணவில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துள்ளனர். அதை உண்டதால் மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில் ரசூல் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் ரசூல் சாப்பிட்ட உணவில் பூச்சி மருந்து கலந்து இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

எனவே இதனை அறிந்த ரசூல் தனது மனைவி மீது சந்தேகம் அடைந்து தனது உறவுக்கார பெண்ணிடம், அம்முபின் போனை வாங்கி சோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளார். அப்போது அவரது வாட்சப்பில் தனது கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டி தனது காதலனுடன் பேசும் ஆடியோக்கள் கிடைத்துள்ளது. அதில் “மருந்து கலந்த மாதுளபழம் ஜூஸ் வேணான்னு சொல்லிட்டான் இப்ப என்ன பண்ணட்டும் சாப்பாட்டில் கலந்து கொடுக்கட்டுமா” என தனது காதலனிடம் பேசியுள்ளார் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவுக்கார பெண் மற்றும் ரசூல் இது குறித்து போலீசில் புகாரளித்துள்ளனர்.

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசால் சிகிச்சையில் இருந்த ரசூலிடம் விசாரணை மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்துள்ளனர். இந்நிலையில் தப்பி செல்ல முயற்சித்த அம்முபி மற்றும் அவரது காதலன் லோகேஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்துள்ளனர். மனைவியே கணவனுக்கு உணவில் பூச்சி மாத்திரை கலந்து கொடுத்து கொல்ல நினைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.