“தனிமையில் இருந்த மனைவி” - விவசாயம் முடித்து வீடு திரும்பிய கணவன்.. சிறிது நேரத்தில் போலீசாருக்கு செய்த போன் கால்!

வாழ்ந்து வந்த கோவிந்தம்மாள் காவேரியுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளார்
govindhammal and kaveri
govindhammal and kaveri
Published on
Updated on
2 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் குண்டலபட்டி அடுத்த சவுளுரை சேர்ந்தவர் 70 வயதான விவசாயி காவேரி. இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு குருவம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். கருது வேறுபாடு காரணமாக குருவம்மாள் காவேரியிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். பிறகு காவேரி குருவம்மாளின் அக்கா மங்கம்மாள் என்பவரை 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

திருமணமான சில மாதங்களிலேயே மங்கம்மாளும் காவேரியின் கொடுமை தாங்க முடியாமல் அவரை பிரிந்து சென்றுள்ளார். இதனை அடுத்து காவேரிக்கு துடுக்கனஹள்ளி பகுதியை சேர்ந்த 45 வயதான கோவிந்தம்மாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று திருமணம் செய்து கொண்டு 3 வது கணவருடன் வாழ்ந்து வந்த கோவிந்தம்மாள் காவேரியுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளார். காலப்போக்கில் அவரது கணவரை பிரிந்து காவிரியுடன் திருமணம் செய்யாமலே ஒரே வீட்டில் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளார்.

காவேரி விவசாயம் செய்வதால் காலை வயலுக்கு செல்லும் அவர் மாலை இருட்டியதும் தான் வீடு திரும்புவாராம். இதற்கிடையே கோவிந்தம்மாளுக்கு அதே பகுதியை சேர்ந்த 35 வயதான தங்கராஜ் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதை தெரிந்து கொண்ட அக்கம் பக்கத்தினர் தங்கராஜ் பற்றி காவேரியிடம் கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த காவேரி வழக்கம் போல் சில தினங்களுக்கு முன்பு வயலுக்கு சென்று மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது கோவிந்தம்மாள் தங்கராஜுடன் தனிமையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

Admin

இந்நிலையில் கோவிந்தம்மாளுக்கு அறிவுரை கூறிய காவேரி தங்கராஜுடனான உறவை கைவிட கூறியுள்ளார். இதற்கு கோவிந்தம்மாள் மறுக்கவே ஆத்திரம் அடைந்த காவேரி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கோவிந்தம்மாளை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கோவிந்தம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து காவேரி தான் செய்த கொலையை பற்றி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் காவேரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தன்னுடன் வாழ்ந்து வந்த பெண்ணை அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com