க்ரைம்

“திருநங்கையின் தலைக்கேறிய காம வெறி” - காலியிடத்தில் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்… நள்ளிரவில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

கணவரிடம் சண்டை போட்டி விட்டு தனது தோழி வீட்டிற்கு செல்வதற்காக ஈரோடு ரயில் நிலையத்திற்கு சென்றிருக்கிறார்...

Mahalakshmi Somasundaram

ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையம் புறவழிச்சாலையில் கடந்த (பிப் 10) ஆம் தேதி அடையாளம் தெரியாத இளம் பெண் தலையில் கல்லை போட்டு கொல்லப்பட்டு நிர்வாணமாக கிடந்துள்ளார். இளம் பெண்ணை சடலமாக பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் பெருந்துறை பிச்சாண்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நர்மதா என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நர்மதா அடிக்கடி கணவரிடம் கோபித்து கொண்டு அவரது தாய் அல்லது தோழி வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அது போல கடந்த (பிப் 3) ஆம் தேதி கணவரிடம் சண்டை போட்டி விட்டு தனது தோழி வீட்டிற்கு செல்வதற்காக ஈரோடு ரயில் நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.

அப்போது அங்கிருந்த 17 வயதுடைய தீபன் குமார் என்ற திருநங்கை நர்மதாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கிறார். பின்னர் நர்மதாவை வலுக்கட்டாயமாக ரயில் நிலையத்திற்கு பின் இருக்கும் காளி இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் நர்மதா அவருடன் உடலுறவு வைக்க மறுத்து சண்டையிட்டதால் அருகில் இருந்த கல்லால் அவரை சரமாரியாக அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். இதனை தொடர்ந்து போலீசார் 5 தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் கடந்த சில தினங்களாக குற்றவாளியை தேடி வந்த நிலையில் நர்மதா சம்பவத்தன்று ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு தனியார் பேருந்து மூலம் சென்ற போது இளைஞர் ஒருவர் நர்மதாவை பி தொடர்ந்து அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீபன்குமாரை கைது விசாரணை மேற்கொண்ட போது அவர் நர்மதாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும். தீபன் குமார் 17 வயதுடைய அறுவை சிகிச்சை செய்யாத திருநங்கை என்பதும் தெரியவந்தது. பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.